மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
தேனி, அக்.30: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தார். இக்கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 91 மனுக்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வாக, ரூ.15,750 மதிப்பிலான...
கொலை செய்ய திட்டம் தீட்டிய வாலிபர் கைது
திண்டுக்கல், அக். 29: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்ஐ அங்கமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல்- திருச்சி சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். அப்போது போலீசார்...
டூவீலர் திருட்டு
போடி, அக்.29: போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (40) இவர் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, தனது டூவீலரை, மீனா விலக்கு பகுதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை திரும்பி வந்து...
ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு
ஆண்டிபட்டி, அக்.29: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பணிகள் நடைபெறும் விதம், பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஊராட்சியில் நடைபெற்று வரும்...
தென்னையில் பேன்களின் தாக்குதலை தடுக்கலாம்
தேனி, அக். 28: தென்னையில் ஈரியோபிட் பேன் தாக்குதல் காணப்பட்டால் அதனை எளிதில் குறைக்கலாம் என, வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தென்னையில் ஈரியோபிட் பேன் முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்களாக காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும். காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில்...
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
கொடைக்கானல், அக்.28: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பூம்பாறை பிரிவு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார்...
டூவீலர் மோதி முதியவர் படுகாயம்
நத்தம், அக்.28: நத்தம் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்குச் செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை நோக்கி ஜெயக்கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் கிருஷ்ணன் பலத்த...
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
வருசநாடு, அக். 25: மயிலாடும்பாறை அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மயிலாடும்பாறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் குமணன்தொழு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொன்னம்படுகை கிராமம் செல்லும் சாலையில் 15 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த குமணன்தொழுவை சேர்ந்த ஆனந்தன் 40, சுடுகாடு அருகே 20 கிராம்...
கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடை முறையாக தூர்வாரப்படுமா?
கம்பம், அக். 25: கம்பத்தில் வெள்ளச் சேதங்களை தவிர்க்க சேனை ஓடையை முறையாக தூர் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18ம் தேதி பெய்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக கம்பம்மெட்டு அடிவாரப் பகுதியில் உருவாகக்கூடிய காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால்...