உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
தேனி, ஜூலை 6: தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை செம்மைப்படுத்தி, அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வகையில், ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டம் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று உங்களுடன்...
மூணாறு பகுதியில் மீண்டும், மீண்டும் மிரட்டும் படையப்பா காட்டு யானை
மூணாறு, ஜூலை 6: மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும்...
மயங்கி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி
தேனி, ஜூலை 6: தேனி நகர் பள்ளி ஓடைத் தெருவை சேர்ந்தவர் ராஜா (58). இவரும், இவரது மனைவி கருப்பம்மாளும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ராஜா வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது, வீட்டிற்கு அருகேயே திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படடது....
இளநீர் வியாபாரம் விறுவிறு
தேனி, ஜூலை 5: தேனி மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதேபோல் ஆரஞ்சு பழச்சாறு, முலாம்பழச்சாறு மற்றும்...
டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு
பழநி, ஜூலை 5: பழநி அருகே உள்ள தேவத்தூரைச் சேர்ந்தவர் கண்ணையன் (60). இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் பழநி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருநகர் அருகே, பின்னால் வந்த மற்றொரு டூவீலர், கண்ணையனின் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கண்ணையன், பழநி அரசு...
கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மூணாறு, ஜூலை 5: தொடுபுழா அருகே உள்ள முட்டம் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியதை பார்த்த டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கினர். அவர்கள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் முற்றிலும்...
குறைந்த விலை மெத்தைகளால் பக்க விளைவுகள் ஏற்படும்
ஆண்டிபட்டி, ஜூலை 4: சாலையோரங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மெத்தைகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநில வியாபாரிகளும் மத்தளம் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வருவர்.அதுபோல் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தைகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு...
வீட்டுத்தோட்டம் அமைக்கும் வழிமுறைகள் தோட்டக்கலைத்துறையினர் டிப்ஸ்
தேனி, ஜூலை 4: பொதுமக்கள் வீட்டுத்தோட்டம் அமைக்க கடைப்பிடிக்க ேவண்டிய வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: வீட்டில் தோட்டம் அமைக்கும் இடத்தில் போதிய அளவில் சூரிய ஒளி இருக்க வேண்டும். வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி போன்ற காய்கறி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும் விதையின் அளவை விட இரண்டரை மடங்கு ஆழத்தில் (சுமாராக 5...
கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது வழக்கு
போடி, ஜூலை 4: போடி முந்தல் சாலையில் அரசு உதவிபெறும் ஏல விவசாயிகள் சங்க கல்லூரி உள்ளது. இக்கல்லூரி முதல்வர் சிவக்குமார். போடி திருமலாபுரம், குப்பளகிரி தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் இக்கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் நேற்று முன் தினம் கல்லூரிக்கு வந்து அலுவலக ஊழியரிடம் தனது மகனின் மதிப்பெண்...