அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை
உத்தமபாளையம், ஜூலை 2:உத்தமபாளையம் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை நூறு வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 12 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவர்கள் பற்றாகுறையால், இரவில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவு...
சாலைகளில் சோலார் சிக்னல் விளக்குகள் பழுது
வருசநாடு, ஜூலை 2: கடமலைக்குண்டு அருகே சாலைகளில் உள்ள சோலார் சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, பொன்னம்மாள்பட்டி, டாணா தோட்டம், அய்யனார்புரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, ஓட்டனை போன்ற பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் சோலார் விளக்குகள் நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில...
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
தேனி, ஜூலை 1: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 350 மனுக்களை...
தலைமை காவலர்களாக 127 பேர் பதவி உயர்வு
தேனி, ஜூலை 1 :தமிழ்நாடு காவல்துறையில் 2ம் நிலைக் காவலர்களாக பணியில் சேருபவர்கள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததும், முதல்நிலைக்காவலர்களாக பதவி உயர்வு பெறுவர். தற்போது அரசு பணி நிறைவு செய்தாலே சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 13 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் முதல் நிலைக்காவலர் நிலையில் இருந்து தலைமைக்...
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
தேனி, ஜூலை 2: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல...
இடுக்கியில் கனமழை எச்சரிக்கை மூணாறில் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது
மூணாறு, ஜூன் 30: கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாக தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்கள் முன்பு வரை இடுக்கி மாவட்டம் மூணாறு உட்பட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் படகு சவாரி மற்றும் சாகச சுற்றுலா மையங்கள் அனைத்தும் அடைத்து பூட்டப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது....
ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி கிராமத்தில் சாதனை விளக்க கூட்டம்
ஆண்டிபட்டி, ஜூன் 30: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்...
தேவாரம் மலையடிவார பகுதியில் மக்காச்சோளம் விவசாயத்தை ஊக்குவிக்க கோரிக்கை
தேவாரம், ஜூன் 30: தேவாரம் மலையடிவாரத்தில் மக்காச்சோள விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நவதானிய விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம்...
சாலையோர ஆக்கிரமிப்பால் அவதி
வருசநாடு, ஜூன் 27: வருசநாடு அருகே வாய்க்கால்பாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்த காரணத்தால் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிக்கல் நிலை வருகிறது. இதே போல் வாய்க்கால் பாறை கிராமத்தில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையும் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சாலையோரங்களில் வாகனங்களை...