போடி அருகே பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு: போலீசில் புகார்
போடி, ஆக.6: போடி அருகே அரசு நிலப்பகுதியில் உள்ள பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போடி அருகே ராணிமங்கம்மாள் சாலையில், அரசு நிலப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக இந்த...
உடையும் நிலையில் இருந்த மின் கம்பம் மாற்றம்
தேனி, ஆக.6: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டியில் விவசாய நிலத்தில் மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதனை மாற்றி வேறு மின்கம்பம் அமைக்க இப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் தேனி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி அணி தலைவர் இனியவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மின்வாரியத்துறை அலுவலகத்தை அணுகி பழுதடைந்த மின் கம்பத்தை...
சந்தனக் கட்டை கடத்தியவர்கள் கைது
வேடசந்தூர், ஆக.5: நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதிகளில் இருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, இருவரும் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் பைக்கை சோதனையிட்டபோது, சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்த வெள்ளையன்,அடைக்கன்கைது செய்தனர். ...
வயல்களில் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு
கூடலூர், ஆக. 5: கூடலூர் பகுதிகளில் கரும்பு, தென்னை ஆகியவற்றின் கழிவுகள் விவசாய நிலங்களில் வைத்து எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற கழிவுகளை எரிப்பதற்கு மாற்று வழிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு, மீறி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி கிடாமுட்டு போட்டி நடத்தியவர்கள் கைது
தேவதானப்பட்டி, ஆக 5: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் போலீசாருக்கு ஆண்டிபட்டி சாலையில் உள்ள தனியார் காபி கம்பெனி பகுதியில் கிடாமுட்டு போட்டி நடப்பதாக தகவல் கிடைத்தது. ஜெயமங்கலம் எஸ்.ஐ.முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை சண்டையிட வைத்து சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டி கன்னியப்பிள்ளைப்பட்டியைச் சேர்ந்த கோபால்(34)...
டூவீலர் மோதி வாட்ச்மேன் சாவு
திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் அருகே பொன்னகரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (55). இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் நத்தம்- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவர் ஓட்டி...
ஆடிப்பெருக்கு முல்லை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
தேனி, ஆக.4: ஆடி மாதத்தின் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் புதுமண தம்பதியினர் நீர்நிலைகளுக்கு சென்று வழிபட்டு தாலி பெருக்கிக் கொள்வது வழக்கம். இதன்படி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லை ஆற்றங்கரையில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இறைவனை வேண்டி புதுமண தம்பதியினர் மற்றும் பெண்கள் தாலி...
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி யானைகெஜம் அருவி சுற்றுலாத்தலமாக மாறுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு
வருசநாடு, ஆக. 3: வருசநாடு அருகே உப்புத்துரை யானைகெஜம் அருவியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே உப்புத்துரையில் உள்ள யானைகெஜம் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் யானைகெஜம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள்...
மூணாறில் கால்பந்தாட்ட போட்டி
மூணாறு, ஆக. 3: கேரளா மாநிலம் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி இன்று ஆக.3ல் நடக்கிறது. மழை கால சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ரெயின் 40’ என்ற பெயரில் பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு...