கழிவுநீர் கால்வாயில் இருந்து முதியவரின் உடல் மீட்பு
ஆண்டிபட்டி, டிச.2: ஆண்டிபட்டி அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த முதியவர் சடலம் மீட்கப்பட்டது. ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள சக்கம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இடதுபுறமாக செல்லும் கழிவுநீர் கால்வாய் தண்ணீருக்குள் தலை மூழ்கிய நிலையில் உயிரிழந்த முதியவரின் உடலை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு...
கொலை வழக்கில் 3 பேர் கைது
தேனி, டிச.1: போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கராம் மகன் ரமேஷ் (35). கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எஸ்பி சினேகா பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் ரமேஷுக்கும் அவரது தாயார் லோகுமணிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் லோகுமணி தூண்டுதலின் பேரில், அவரது மருமகனான கூடலூரைச்...
நெடுஞ்சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
தேனி, டிச.1: தேனி அருகே ரத்தினம் நகரில் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டி, ரத்தினம் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. தேனி நகரினை ஒட்டியுள்ள இப்பகுதியானது தேனி நகரின் விரிவாக்க நகர் பகுதியாகவே உள்ளது. இதனால் சுக்குவாடன்பட்டி, ரத்தினம் நகர் பகுதிகளில் ஏராளமான...
விடுமுறை நாளை முன்னிட்டு வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆண்டிபட்டி, டிச.1: ஆண்டிபட்டி அருகே வைகை அணை பகுதியில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் சனி...
தேவதானப்பட்டி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்
தேவதானப்பட்டி, நவ. 29: தேவதானப்பட்டி எஸ்.ஐ. ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் ஒரு கிலோ 280 கிராம் கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை...
கண்டமனூர் அருகே பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார கேடு
வருசநாடு, நவ.29: கண்டமனூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சிலர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவை சாலையோரம் குவிந்து வருகிறது. இவை காற்றில் பறந்து சாலைகளில் குப்பைகள் சிதறுகின்றன. மேலும் மழை பெய்தால் கழிவுகள் சாலைக்கு இழுத்து...
மூச்சுத்திணறலால் குழந்தை பரிதாப சாவு
சின்னமனூர், நவ. 29: பெரியகுளம் தாமரைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி சித்திரை செல்வி. இவர்களது குழந்தைகள் ஜீவஸ்ரீ (3), தியாஸ்ரீ. ஏழு மாத குழந்தையான தியாஸ்ரீக்கு அடிக்கடி உடல்நலம் பாதித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை சின்னமனூரில் உள்ள செல்ல கருப்பணசாமி கோயிலுக்கு தூக்கி சென்று கயிறு கட்டியுள்ளனர். அப்போது, திடீரென...
ஆடுகளை கடித்ததாக கூறி நாயை தூக்கிலிட்டு கொடூர கொலை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
வருசநாடு, நவ. 28: ஆடுகளை கடித்ததாக கூறி நாயை தூக்கில் தொங்கவிட்டு, சித்ரவதை செய்து கொல்லும் கொடூர காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடமலைக்குண்டு கிராமத்தில் காய்கறி வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் வீசப்படும்...
போடி அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
தேனி, நவ.28: போடி அருகே மலை கிராமங்களில் சாலை வசதி அமைத்து தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். போடி அருகே உள்ள முட்டம், முதுவார்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். அதில்,...