பெண் மீது தாக்குதல் போலீசார் வழக்கு
தேவதானப்பட்டி, ஜூலை 30: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ஜி.எச்.ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(30). இவரது மனைவி பாண்டியம்மாள்(24). இந்நிலையில் சம்பவத்தன்று, வீட்டில் இருந்த பாண்டியம்மாளை, முன்விரோதம் காரணமாக பகவதி நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன்கள் ஹரீஸ், சரவணன், ஆனந்த் மற்றும் சிலர், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், பெரியகுளம்...
சுருளி அருவி சாலையில் உள்ள குடிநீர் தொட்டி சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடலூர், ஜூலை 30: தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி அருகே, சுருளி அருவி சாலையில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த...
சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்
தேவதானப்பட்டி, ஜூலை 29: தேவதானப்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(45). இவரது பூர்வீக சொத்து மஞ்சளாறு அணை செல்லும் வழியில் உள்ளது. இவருக்கும் இவரது சித்தப்பா கோட்டைராஜ் என்பவருக்கும் தோட்டத்திற்கு செல்வதில் பாதை பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்...
பெரியகுளத்தில் விசிக பொதுக்கூட்டம்
தேனி, ஜூலை 29: தேனி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரியகுளம் நகர் மதுரை சாலையில், விசிக கட்சியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக், சார்பு அணி நிர்வாகிகள் மது, தொல்தளபதி முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி செயலாளர்...
விளையாடிக்கொண்டிருந்த போது தொட்டில் கயிறு இறுக்கி 10 வயது சிறுவன் சாவு: தேனியில் சோகம்
தேனி, ஜூலை 29: தேனியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். தேனி நகரில் உள்ள சிவராம்நகரில் குடியிருப்பவர் ஸ்ரீதர் மகன் ஜெயபாரதி(31). இவர் தனியார் ஆங்கிலப் பள்ளியொன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீபாலாஜி(10) இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று...
டூவீலர் மீது ஆட்டோ மோதல்
போடி, ஜூலை 28: போடி அருகே பூதிப்புரம் ஆதிபட்டியை சேர்ந்தவர் கணேசன்(40). இவர் நேற்று முன் தினம் மாலை தனது டூவீலரில் 2 பெண் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு நாகலாபுரத்தில் இருந்து டொம்புச்சேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பெருமாள்கவுண்டன்பட்டி சந்திப்பில் சென்ற போது எதிர்திசையில் வந்த ஆட்டோ டூவீலரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு டூவீலரில் வந்த 3...
வீரபாண்டியில் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு
தேனி, ஜூலை 28: தேனி அருகே வீரபாண்டியில் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். தேனி அருகே வீரபாண்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து...
இரவு நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுகோள்
தேவாரம், ஜூலை 28: கோம்பை பகுதிகளில் கோம்பை, மேலசிந்தலை சேரி, பல்லவராயன்பட்டி பண்ணைப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் இருந்தும் இரவு 10 மணிக்கு மேல், அரசு பஸ்களோ, தனியார் பஸ் சேவைகளோ இல்லை. அரசு பஸ்கள் காலையில் இருந்து, இரவு வரை உத்தமபாளையம், போடி, கம்பம், என...
சின்னமனூர் அருகே தண்ணீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?
சின்னமனூர், ஜூலை 26: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குச்சனூர் ராஜபாளையம் பகுதி மெயின் ரோட்டில் ஆழ்குழாய் மோட்டார் இணைக்கப்பட்டு தண்ணீர்...