க.மயிலாடும்பாறை அருகே குடிநீர் விநியோக்க கோரிக்கை

வருசநாடு, நவ.22: மயிலாடும்பாறை அருகே முறையாக குடிநீர் விநியோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கருப்பையாபுரம், தாழையூத்து, அருகுவேலி, கருமலை சாஸ்தாபுரம், சத்தியதாய்நகர், உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர்...

சாலை விபத்தில் பெண் பலி

By Ranjith
21 Nov 2025

தேனி, நவ.22: கூடலூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி மனைவி பாக்கியம்(60). இவர் நேற்று முன்தினம், கூடலூரில் இருந்து உறவினர் சரவணன்(35) என்பவருடன் டூவீலரில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பாக்கியம்,...

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

By Ranjith
21 Nov 2025

காங்கயம், நவ.22: வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் நேற்று மளிகை கடைகளில் சோதனையிட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளக்கோவில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாமியாத்தாள் (56), என்பவரது மளிகை கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிவந்தது. ...

டூவீலர்கள் மோதி 3 பேர் படுகாயம்

By Ranjith
20 Nov 2025

நத்தம், நவ. 21: நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). விவசாயி. இவர் தனது டூ - வீலரில் செந்துறை நோக்கி சென்றார். அப்போது மங்களப்பட்டி பிரிவு ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது பின்னால் சின்னமலையூரைச் சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் பழனிச்சாமி, சரவணன் மற்றும் சரவணன் ஓட்டி வந்த...

மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்

By Ranjith
20 Nov 2025

மூணாறு, நவ. 21: தமிழ்நாடு கரூர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் இரண்டு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தங்கள் வந்த பேருந்தை மூணாறில் நிறுத்தி விட்டு உள்ளூர் சுற்றுலா ஜீப்புகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று காலை மூணாறில் இருந்து ஐந்து ஜீப்புகளில் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு செல்லும் வழியில் மாட்டுப்பட்டி...

வருசநாடு அருகே சேதமடைந்த மேல்நிலை தொட்டி

By Ranjith
20 Nov 2025

வருசநாடு, நவ. 21: வருசநாடு அருகே சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு,...

மழையால் பயிர்கள் சேதம் தக்காளி விலை கடும் உயர்வு

By Ranjith
18 Nov 2025

கம்பம், நவ.19: கம்பம் பகுதியில் தக்காளியின் விலை கிடுகிடு என உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைய தொடங்கியுள்ளனர். கம்பம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கே.கே.பட்டி, கூடலூர், எரசை, அபிபட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நாள்தோறும் கம்பம் பள்ளத்தாக்கு...

மதுபாட்டில் பறிமுதல் இரண்டு பேர் கைது

By Ranjith
18 Nov 2025

போடி, நவ.19: போடி பகுதியில் புகையிலை மற்றும் மது பாட்டில்கள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். போடி சர்ச் தெருவை சேர்ந்த ஆண்டவர் மகன் விஜய் (33). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை அனுமதி இன்றி வாங்கி விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தார். அதன்படி பழைய பஸ் நிலையம் அருகே...

கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி உடல் மீட்பு

By Ranjith
18 Nov 2025

போடி, நவ.19: போடி மயானம் ரோடு இ.பி ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் வீரணன்(56). கூலி வேலை செய்து வந்த நிலையில், இவரது மனைவி கண்மணி 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையில் வீரணனுக்கு உடல்நிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தொடர முடியாமல் இருந்தார். கடந்த 16ம் தேதி வீரணன்...

மீனவ இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

By Neethimaan
17 Nov 2025

  தேனி, நவ.18: தேனி மாவட்டத்தில் மீன்வளத்துறை மூலம் மீனவர் பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, மீன்வளத்துறை - மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையம் இணைந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி...