பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் போராட்டம்
தேனி, ஜூலை 23: தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில...
நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனி, ஜூலை 23: தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (25ம் தேதி) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள்...
புகையிலை பதுக்கிய 2 பேர் கைது
போடி, ஜூலை 22: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி மதுரைவீரன் வடக்கு தெருவை சேர்ந்த முத்து(37) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துவை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல்...
எஸ்பியிடம் மனு
தேனி, ஜூலை 22: கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் சட்ட விரோதமாக நடைபெறும் கல்குவாரி இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பரத் ஆகியோர் தலைமையில் இக்கட்சியை சேர்ந்த 50க்கும்...
கூடலூர்-குமுளி சாலையில் விரிசல்
கூடலூர், ஜூலை 22: தேனி மாவட்டம் கூடலூர் நகரில் இருந்து குமுளி செல்லும் புறவழிச் சாலை சந்திப்பில் மந்தைவாய்க்கால் அருகே பாலத்தின் மீது போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் கீழே வாய்க்கால் செல்வதால் விரிசல் அதிகமாகி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனே...
கூடலூர் பகுதிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்
கூடலூர், ஜூலை 21: கூடலூர் பகுதிக்கு தனி உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உணவு பாதுகாப்புத்துறையை நிர்வகிக்கிறது. இந்தத் துறையின் முக்கிய நோக்கம் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இதன்...
தேவாரம் - கோம்பை சாலையில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
தேவாரம், ஜூலை 21: தேவாரம் - கோம்பை நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது....
தேனி அருகே வீட்டில் இருந்த ரூ.2 லட்சம், 7 பவுன் நகை மாயம்
தேனி, ஜூலை 21: தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே டொம்புச்சேரியில் உள்ள பழனிசெட்டிபட்டி காலனியில் குடியிருப்பவர் நாகலிங்கம் (48). லாரி டிரைவர். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில்...
சொத்துப் பிரச்னையில் உறவினரை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தம்பிக்கு 3 ஆண்டு சிறை
தேனி: உத்தமபாளையம் அருகே, சொத்துப்பிரச்னையில் உறவினரைக் கொன்ற சகோதரர்களில் அண்ணனுக்கு ஆயுள், தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தமபாளையம் அருகே, சின்னஓவுலாபுரத்தில் உள்ள வரதராஜபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (46). இவரது மகள் சினேகாவை, அதே கிராமத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நல்லசாமியின்...