உத்தமபாளையத்தில் எஸ்.ஐ.ஆர் பணி துவக்கம்
உத்தமபாளையம், நவ. 5: உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் கம்பம், போடி, சட்டமன்ற தொகுதிகளும் ஆண்டிபட்டி (பகுதி), சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் ஒன்றிய அரசின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நேற்று முதல் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தேர்தல் களப்பணியாதவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை வைத்து ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள்...
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையம், நவ. 5: உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து எஸ்.டி.பிஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கல்பத்துல்லாகான் வரவேற்றார். தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணைத்தலைவர் சையது காதர் சாஹிப், மாவட்ட செயலாளர் தாவூத்நிஸார்,...
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
ஒட்டன்சத்திரம், நவ. 1: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று இரவு டூவீலரில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ராமபட்டினம் சாலையில் வந்த போது கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ...
அவகோடா அறுவடை பணி மும்முரம்
கொடைக்கானல், நவ. 1: கொடைக்கானல் மலைப்பகுதியில் மருத்துவ குணமிக்க அவகோடா பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பட்டர் புரூட் என அழைக்கப்படும் இந்த பழங்களை சாப்பிடுவதால் கேன்சர் வருவதை தடுக்கும், ஜீரண கோளாறு, பார்வை குறைபாட்டை தவிர்க்கும், உடல் எடையை குறைக்கும், இதய கோளாறு, அல்சர், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுவதுடன் உடலுக்கு...
குவியும் சுற்றுலாப் பயணிகள் டிராபிக்கில் திணறுது ‘தென்னகத்து காஷ்மீர்’
மூணாறு, நவ. 1: குளுகுளு கிளைமேட்டை அனுபவிக்க மூணாறில் குவியும் சுற்றுலாப் பயணிகளால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மூணாறில் தற்போது...
மயிலாடும்பாறை அருகே சேதமடைந்து கிடக்கும் தொகுப்பு வீடுகள்
வருசநாடு, அக். 31: மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின மக்களுக்கு 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதனையடுத்து மலைகளில் வசித்து வந்த பழங்குடியினர் அனைவரும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர். இந்நிலையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பெரும்பாலான...
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சின்னமனூர், அக். 31: சின்னமனூர் ஒத்த வீடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணை மாரியப்பன் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதீஸ்வரன் என்ற மகன் உள்ளார். மாரியப்பன் தினமும் குடித்துவிட்டு...
மழையின் போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது: மின்வாரியம் அறிவுறுத்தல்
தேனி, அக். 31: மாவட்டத்தில் கனமழைக்கு பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அதுபற்றிய தகவலை அருகில் உள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு ஐ.எஸ்.ஜ. தரசான்று பெற்ற மின் சாதனைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். பழுதடைந்த...
க. புதுப்பட்டி பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம்
உத்தமபாளையம், அக்.30: க.புதுப்பட்டி பேரூராட்சியில் நடந்த வார்டு சபா கூட்டத்தில், கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உத்தமபாளையம் க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. இதில் வார்டுகளில் உள்ள வீடுகளின் கழிவுநீர் முறையாக செல்ல சாக்கடை வசதி, அனைத்து தெருக்களிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை ஆழப்படுத்துதல், சாக்கடை குறைவாக உள்ள...