அண்ணா பிறந்த நாள் விழா
ராமநாதபுரம்,செப்.16: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1...
கடலாடியில் நாளை மின்தடை
சாயல்குடி, செப்.16: கடலாடி, சாயல்குடி பகுதியில் நாளை மின் தடை என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார். கடலாடி துணை மின்நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மலட்டாறு, ஒப்பிலான், மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, கடலாடி, மேலச்சிறுபோது, மீனங்குடி, பொதிகுளம், ஏனாதி, ஆப்பனூர், ஏ.புனவாசல்...
சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
தொண்டி, செப்.16: தொண்டி அருகே நம்புதாளையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இரண்டு சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் சிறுமிகள் இருவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் 16 வயது மற்றும்...
ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
சிவகங்கை, செப்.15: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்...
மினி மாரத்தான் போட்டி
சிங்கம்புணரி, செப்.15: சிங்கம்புணரி அருகே மணப்பட்டியில் 30வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மணப்பட்டியில் இருந்து வேட்டையன்பட்டி வரை 4 கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறார்கள் மாரத்தான் போட்டியில் கலந்து...
கரிசல்குளம் முகாமில் 721 மனுக்கள் வழங்கிய மக்கள்
கமுதி, செப்.15: கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ராமசாமிபட்டி, நீராவி, என்.கரிசல்குளம் எம்.எம். கோட்டை, மேலராமநதி, கே.எம். கோட்டை, ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்...
மானாங்குடி முகாமில் மனுக்களுடன் குவிந்த மக்கள்
மண்டபம்,செப்.14: மானாங்குடி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம் தலைமையில் வகித்து முகாமை துவங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மகளிர் உரிமைத் தொகை,...
ஆவணி களரி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
சாயல்குடி, செப்.14: ஏனாதி பூங்குளத்தில் அய்யனார், மாடசாமி கோயிலில் ஆவணி மாத களரி பூக்குழி திருவிழா நடந்தது. முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளத்தில் உள்ள பூரணதேவி, புஷ்கலாதேவி உடனுரை அய்யனார், சேதுமாகாளி, தெட்சணா மூர்த்தி மாடன், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் ஏனாதி கிராமத்திலுள்ள முத்துகருப்பணசாமி, அக்னி மாடன் ஆவணி மாத களரி திருவிழா...
உச்சிப்புளியில் மின்சார ரயில் இயக்கும் அலுவலகம் திறப்பு
மண்டபம்,செப்.14: ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில்கள் இயக்குவதற்கு உச்சிப்புளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்சார சாதன இயந்திர அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை 60 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே நிர்வாகம் மின்சார மூலம் ரயில்களை இயக்குவதற்கு மின் கம்பங்கள் அமைத்தும்,...