சங்க அமைப்பு தினம்
சிவகங்கை, செப். 13: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாடினர். மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ...
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
சிவகங்கை, செப். 13: சிவகங்கை மாவட்டத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது. சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர...
பட்டப்படிப்பு படிப்போர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, செப்.3: பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர்...
ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
திருப்புத்தூர், செப்.3: திருப்புத்தூர் அருகே மானகிரி மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ மனைவி சாந்தா(47). அரசு பள்ளி ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த 16ம் தேதி ஆறரை பவுன் தங்க நகைகள் திருடு போனது. புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன்(35), மதுரை மாவட்டம்...
மானாமதுரை அருகே கார் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
மானாமதுரை, செப்.2: மானாமதுரை அருகே வாடகை கார் ஒட்டி வந்த டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை அருகே பி.குளம் கிராமத்தை சேர்ந்த நிறைகுளத்தான் மகன் சிவா(24). இவரது நண்பர் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஆனந்த்(21). சிவா தனது ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு காரைக்குடியில் உள்ள ஆனந்தை அழைத்துள்ளார்....
தென்மாபட்டு பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
திருப்புத்தூர், செப்.2: திருப்புத்தூர் தென்மாபட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்புத்தூர் பகுதியில் உள்ள தஞ்சாவூர் - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13...
காரைக்குடியில் கவிதை போட்டி
காரைக்குடி, செப்.2: காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசர் அவைக்களம் சார்பில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. செயலாளர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றார். அவைக்கள நிறுவனர் பாரிமுடியரசன் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜா துவக்கி வைத்தார். துணைச்செயலாளர் கவுதமன் மற்றும் ஆட்சிக்குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இணைச் செயலாளர் முனைவர்...
ஜிஹெச்சில் ஆக்சிஜன் வாயு கசிவு
ராமநாதபுரம், ஆக. 30: ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் திடீரென வாயு வெளியேறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வெளியேறினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவமனை தொழில்நுட்ப பணியாளர்கள், ஆய்வு செய்தனர். அப்போது...
பாப்பாகுளம் முனீஸ்வரர் கோயில் வருடாபிஷேகம்
சாயல்குடி, ஆக.30: கடலாடி அருகே பாப்பாகுளம் கிராமத்திலுள்ள குருத்தடி தர்மமுனீஸ்வரர், பறவை காளியம்மன், கருங்குடி கருப்பர், செல்வகணபதி கோயில் 17ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் இரவில் பெண்கள் கும்மியடித்தும்,இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடி வந்தனர். நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து...