பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம்

பரமக்குடி, ஆக. 30: பரமக்குடி நகராட்சியில் 60, கிராம பகுதிகளில் 20 விநாயகர் சிலைகள் உள்பட 80 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் பழக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெண்களின் திரு விளக்கு வழிபாடு, உறியடி, வினாடி வினா, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு பரமக்குடி, எமனேஸ்வரத்தில்...

மூதாட்டி கொலையில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

By Karthik Yash
28 Aug 2025

சிவகங்கை, ஆக. 29: தேவகோட்டை அருகே கோனேரிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி காளிமுத்து(60). கடந்த 18.10.2010 அன்று ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த தங்கராஜ்(30), ஆண்டிச்சாமி(33), கருப்பு (எ) முருகேசன்(22), ஆளவந்தான்...

மயானத்திற்கு பாதை கோரி மனு

By Karthik Yash
28 Aug 2025

சிவகங்கை, ஆக.29: காளையார்கோவில் அருகே கழுகாடி கிராம ஆதிதிராவிட மக்கள் மயானத்திற்கான பாதை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் ஒன்றியம், சேதாம்பல் ஊராட்சி, கழுகாடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் இனத்தை சார்ந்தவர்கள் இறந்தால் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல நூற்றாண்டுக்கும் மேலாக குறிப்பிட்ட...

பரமக்குடியில் நடந்த முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்ற எம்எல்ஏ

By Karthik Yash
28 Aug 2025

பரமக்குடி,ஆக.29: தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள் திட்டங்களை இல்லங்களுக்கு அருகிலேயே சென்று சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் நேரடியாக இருப்பிடங்களுக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நேற்று பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட...

கோயில் தல வரலாறு நூல் வெளியீடு

By Karthik Yash
28 Aug 2025

திருப்புவனம், ஆக.29: திருப்புவனம் சௌந்திரநாயகி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருப்புவனம் தலவரலாறு குறித்த திருப்ப பூவணத் திரட்டு எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை மதுரை முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் சார்பில் பதிப்பிக்கப்பட்டது. முதல் நூலினை கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் வெளியிட்டார். கோவில் சிவாச்சரியார்கள் பெற்றுக் கொண்டனர். முருகவேள் பன்னிரு திருமுறை...

சிலம்ப போட்டியில் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

By Karthik Yash
28 Aug 2025

மானாமதுரை, ஆக.29: தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றைக்கம்பு பிரிவில் அகதீஸ்குமார், மதன்குமார், சுவாதி, ஷாலினி முதல் இடத்தையும், ஆதித்யா, ஹரிணி இரண்டாம் இடத்தையும், இரட்டைக்கம்பு பிரிவில் ரித்தீஷ், புகழேஷ்,...

செய்யது அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

By Karthik Yash
21 Aug 2025

ராமநாதபுரம், ஆக.22: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் ஆர்.கவிதா வரவேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்து பேசுகையில்:...

சிறப்பு முகாமில் மனு அளித்த மக்கள்

By Karthik Yash
21 Aug 2025

தேவகோட்டை, ஆக.22: தேவகோட்டை தாலுகா, புளியால் ஊராட்சி, திடக்கோட்டை ஊராட்சி, மனைவிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. காரைக்குடி சட்டமன்றத் உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ,ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பூபாலசிங்கம் மற்றும் வட்டாட்சியர் சேது நம்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...

மாணவருக்கு பாராட்டு

By Karthik Yash
21 Aug 2025

சிவகங்கை, ஆக.22: தேவகோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், தொடு போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவன் சிவபாலா ஒற்றை சிலம்பம் போட்டியில்...

மஞ்சுவிரட்டு பேரவை கலந்தாய்வு கூட்டம்

By Ranjith
18 Aug 2025

சிவகங்கை, ஆக.18: சிவகங்கை அருகே பாகனேரியில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சூர்யாசேதுபதி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் செல்வகணேசன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், மாவட்டம் தோறும் அனைத்து வசதிகள்...