இன்றைய மின்தடை
காரைக்குடி,செப்.23: காரைக்குடி அருகே கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தளக்காவூர், பாடத்தான்பட்டி, கண்டரமாணிக்கம், மானகிரி, அப்போலோ, தட்டட்டி, கொரட்டி, பாதரக்குடி, குன்றக்குடியில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ...
மண்டல அளவிலான கபடி போட்டி ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி
காரைக்குடி, செப். 19: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல சார்பில் ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. கல்லூரி துணைமுதல்வர் மகாலிங்கசுரேஷ் வரவேற்றார். ஏஎஸ்பி ஆஷிஷ்புனியா போட்டிகளை துவக்கி வைத்தார். கல்விகுழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து...
கடையை சூறையாடிய 7 பேர் மீது வழக்கு
திருப்புவனம், செப். 19: திருப்புவனம் எம்ஜிஆர் நகரில் குடியிருந்து வருபவர் பாண்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் சிவகங்கை மாவட்ட பாஜக சிந்தனை பிரிவு தலைவராக உள்ளார். இவரது மகள் ஆதிஸ்வரி வீட்டின் ஒரு பகுதியில் கடை நடத்தி வருகிறார். பாண்டியின் சொந்த ஊரான கீழராங்கியத்தில் நிலம் வாங்கி கொடுத்ததில் இவருக்கும், அதே...
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, செப். 19: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜெயப்பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலனை...
மதகுபட்டியில் இன்று மின்தடை
சிவகங்கை, செப்.18: மதகுபட்டியில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. இதனால் மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா...
பக்தர்கள் வினோத வழிபாடு
மண்டபம்,செப்.18: உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் பகுதியில் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் இடுப்பு மற்றும் தோளில் வேல் குத்தி ஆடும் வினோத வழிபாடு நேற்று நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே தாமரை குளத்தில் பத்ரகாளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த பழமையான ஆலயத்தில் ஆண்டு தோறும் பொங்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான...
கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்ட முகாம்
ராமநாதபுரம், செப்.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் தும்படைக்காகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும், மதுரை மாவட்ட கூட்டுறவு பயிற்சி நிலையமும் இணைந்து உறுப்பினர் கல்வி திட்ட முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மதுரை கூட்டுறவு பயிற்சி நிலைய பேராசிரியர் அழகுபாண்டியன், கூட்டுறவுத்துறையில் மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்களை தெளிவாக எடுத்துரைத்தார்....
அண்ணா படத்திற்கு மரியாதை
பரமக்குடி,செப்.17: பரமக்குடியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பரமக்குடி நகர் இளைஞர் அணி சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பரமக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில், அண்ணாவின் பிறந்தநாள் விழா பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் உருவப்படத்திற்கு தொகுதி பொறுப்பாளர் கொடி சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர்...
படைவீரர் குறைதீர் கூட்டம்
சிவகங்கை, செப்.17: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலக அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.25 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை...