திருப்புத்தூர் நூலகத்தில் இளையோர் பேச்சரங்கம்
திருப்புத்தூர், ஜூலை 21: திருப்புத்தூர் அண்ணா முழு நேர கிளை நூலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு \”இளையோர் பேச்சரங்கம்\” நடைபெற்றது. எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் ஞான பண்டிதன் எழுதிய \”சிங்கத்தின்...
மரக்கிளை விழுந்து பாதிப்பு
சாயல்குடி, ஜூலை 20: முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் முதல் பரமக்குடி வரையிலும் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இந்நிலையில் கீழத்தூவல் பகுதியில் இருந்த புளியமரம் ஒன்றின் கிளை காற்றின் வேகத்திற்கு முறிந்து விழுந்தது. இதனால் முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் போக்குவரத்து...
சாலையில் கிடந்த தங்க சங்கிலி ஒப்படைப்பு
சாயல்குடி, ஜூலை 20: கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்க சங்கிலியை முதுகுளத்தூர் டி.எஸ்.பி முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி பவித்ரா(47). இவர் கடந்த திங்கட்கிழமை கமுதியில் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை தவற விட்டுள்ளார். இது தொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் நகையை...
ஆனந்தூர் சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு மனுக்கள்
ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 20: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆனந்தூரில் 4 ஊராட்சி மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் நகர்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகள் மூலமாக 45 சேவைகளும் பெற முடியும். பொதுமக்கள் அனைத்து...
ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு விண்ணப்பம்
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை(3), செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் நிலை (2),...
டிட்டோ ஜாக்மறியல் போராட்டம்
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 2ம் நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல் வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட...
மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
தொண்டி, ஜூலை 19: திருவாடானை வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். திருவாடானை குறுவட்டார அளவில் பள்ளிகளுக்கிடையேயான கேரம் போர்டு, வளையப்பந்து விளையாட்டு போட்டி திருவெற்றியூர் நார்பர்ட் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரிய சூசை போட்டிகளை துவங்கி...
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிவகங்கை, ஜூலை 18: திருப்புவனம் பழையூரில் திமுக பேரூர் இளைஞரணி மற்றும் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் கலைஞரின் பிறந்த நளை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர்....
கொத்தனார் தற்கொலை
திருப்புத்தூர், ஜூலை 18: மதுரை மாவட்டம் மூடுவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் திருப்புத்தூர் அருகே உள்ள அருளிக்கோட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி உள்ளார். சக ஊழியர்கள் மதிய உணவிற்கு வீட்டிற்கு...