செங்காந்தன்குடியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை, அக்.13: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை காரைக்குடி அருகே செங்காந்தன்குடியில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள்...
அமைச்சர் தலைமையில் அரசு வழக்கறிஞர் இல்ல விழா
காரைக்குடி, அக்,13: காரைக்குடியில் அரசு வழக்கறிஞர் எல்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், திட்டகுழு உறுப்பினர் பி.ராதா ஆகியோர் புதல்வன் பி.ஆதிருத்ரநாதன் இல்ல காதணி விழா நடந்தது. பி.ஆதிஜெகன்நாதன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து வாழ்த்தினார்.. முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி...
அதிகமாக உரமிடுவதால் நெற்பயிர்களில் பாதிப்பு
சிவகங்கை, அக்.13: மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, நெற்பயிர்களுக்கு டிஏபி, யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவில் நெற்பயிரிடப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதில் இருந்து 25வது நாள், 45வது நாள், 65வது நாள் தலா 22 கி.கி உரமிட்டால் போதுமானது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்தில் 25, 45, 65வது நாட்களில்...
சிவகங்கையில் டாக்டர்கள் போராட்டம்
சிவகங்கை, அக்.9:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு பஜாரை சேர்ந்த ஒருவர் டூவீலர் விபத்தில் காயமடைந்து மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில்...
கடனை திருப்பி தராதவரை கடத்திய சம்பவத்தில் மூன்று பேர் கைது
காரைக்குடி, அக்.9: காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில், சேக் தாவூத் ஏசி சேல்ஸ் அண்டு சர்வீஸ் கடை நடத்துகிறார். இவர் கடையில் முதுகுளத்தூர் உலையூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் குமார்(40). வேலை செய்கிறார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மானாமதுரையில் ஏ.சி. சர்வீஸ் கடை நடத்துவதாக கூறி மானாமதுரை காட்டு உடைகுளத்தை சேர்ந்த முனீஸ்வரனிடம் ரூ.5.30...
சிங்கம்புணரி அருகே கோயிலில் சாத்தரை திருவிழா
சிங்கம்புணரி, அக்.9: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வலசைப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சாத்தரை திருவிழா கடந்த செப்.23ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. வலசைப்பட்டியில் கிராமத்தினர் முசுண்டப்பட்டி வேளாளர் வம்சாவளியினரிடம் பிடிமண் கொடுத்து அம்மன் உருவம் செய்யப்பட்டது. முசுண்டபட்டியில் செய்யப்பட்ட...
கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சிவகங்கை, அக்.4: சிவகங்கையில் காதி கிராப்ட் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து...
தொழிற்கூடங்களுக்கு விரைந்து உரிமம் மாவட்ட தொழில் மையம் தகவல்
சிவகங்கை, அக்.4: தொழிற்கூடங்கள் நிறுவ தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படுவதாக மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், மேம்பாடு அடைய செய்யவும் தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன...
ராமநாதபுரம் வருகை வந்த முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு
ராமேஸ்வரம், அக். 4: ராமநாதபுரம் வருகை வந்த தமிழ்நாடு முதல்வருக்கு மாவட்ட மாணவரணி, மாநில தொழிலாளர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்ட நுழைவில் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சுரேஷ் தலைமையில்...