சுகாதார உதவியாளர் பயிற்சி பெற விண்ணப்பம்
சிவகங்கை, ஜூலை 24: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான...
சிவகங்கையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை, ஜூலை 24: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக. நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை...
உள்ளாட்சி துறை ஊழியர் சங்க கூட்டம்
சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்ட நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வேங்கையா,...
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, ஜூலை 23: மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு...
ஒன்றிய பேரவை கூட்டம்
சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கௌதம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ் பேசினர். ஒருங்கிணைப்பாளராக ஜீவானந்தம், துணை ஒருங்கிணைப்பாளர்களாக குணா, பொன்னுச்சாமி தேர்வு செய்யப்பட்டனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் வழி செல்லும் அனைத்து...
சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
சிவகங்கை, ஜூலை 21: சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பியாக சிவபிரசாத் பொறுப்பேற்றுக்கொண்டார். சிவகங்கை எஸ்பியாக ஆசிஷ்ராவத் கடந்த ஜனவரி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது இறந்த பிரச்னையில் ஜூலை 1ம் தேதி எஸ்பி ஆசிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ், சிவகங்கை மாவட்ட...
திருப்புத்தூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
திருப்புத்தூர், ஜூலை 21: திருப்புத்தூரில் மன்னர் அழகுமுத்து கோனின் 268வது குருபூஜை விழாவை முன்னிட்டு வீர யாதவ சமுதாய அறக்கட்டளையினர் சார்பில் நேற்று இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில், பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 21 ஜோடிகளும் பங்கேற்றன. இதில் பெரிய மாடுகளுக்கு 8 மைல்...
திருப்புத்தூர் நூலகத்தில் இளையோர் பேச்சரங்கம்
திருப்புத்தூர், ஜூலை 21: திருப்புத்தூர் அண்ணா முழு நேர கிளை நூலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு \”இளையோர் பேச்சரங்கம்\” நடைபெற்றது. எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் ஞான பண்டிதன் எழுதிய \”சிங்கத்தின்...
மரக்கிளை விழுந்து பாதிப்பு
சாயல்குடி, ஜூலை 20: முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் முதல் பரமக்குடி வரையிலும் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இந்நிலையில் கீழத்தூவல் பகுதியில் இருந்த புளியமரம் ஒன்றின் கிளை காற்றின் வேகத்திற்கு முறிந்து விழுந்தது. இதனால் முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் போக்குவரத்து...