சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி
சிவகங்கை, நவ.27: சிவகங்கை அருகே குமாரபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டப் பகுதி, உப்பார் உபவடி நிலப்பகுதி விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் செல்வி தலைமை வகித்தார். நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கன படுத்தும் முறைகள், விவசாய விளைபொருளை மதிப்பு கூட்டும்...
சிவகங்கை அருகே சிப்காட் சாலை பணிகள் தொடக்கம்: முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைகிறது
சிவகங்கை, நவ. 26: சிவகங்கை அருகே அரசனூர் பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு 100 அடி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் மாநிலத்தில் 15க்கும் அதிகமான இடத்தில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கையில்...
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்: உடனே சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்
மானாமதுரை, நவ.26: மானாமதுரையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு பார்வோ வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக கால்நடை மருத்துவமனைக்கு வந்த ஏராளமான நாய்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை போல விலங்குகளும் நோய் பாதிப்புக்குள்ளாகின்றன. அந்த வகையில் மானாமதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள்...
அரசு மருத்துவமனையில் லிப்ட் செயல்படாததால் நோயாளிகள் கடும் அவதி
சிவகங்கை, நவ. 25: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் செயல்படாததால் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத்தொடங்கியது. இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள்...
மண்பாண்டத்தால் கிடைக்கும் நன்மைகளை பாடப்புத்தகத்தில் சேர்க்கக்கோரி மனு
சிவகங்கை, நவ. 25: மண்பாண்டத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மானாமதுரையை சார்ந்த தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராதா, மகளிர் அணி...
சிவகங்கையில் அதிகபட்சமாக 90.4 மி.மீ மழைப்பதிவு
சிவகங்கை, நவ. 25: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலம் தவறிய பருவ மழை, போதிய மழை இல்லாமை உள்ளிட்டவைகளால் கண்மாய், குளங்களில் நீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு...
அதிவேகத்தில் டூவீலர்களில் பறக்கும் இளைஞர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காரைக்குடி, நவ. 18: காரைக்குடியில் அசுர வேகத்தில் டூவீலர்களை ஓட்டி செல்வோர் அதிகரித்து வருவதால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. காரைக்குடி பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் அதிகஅளவில் டூவீலர்களில் வருவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் அதிக விலையுள்ள ரேஸ் பைக் போன்று உள்ளதையே பயன்படுத்துகின்றனர்....
தொண்டி பாவோடி மைதானம் பகுதியில் பாதியில் நிற்கும் கட்டுமானப்பணி
தொண்டி, நவ. 18: தொண்டி பாவோடி மைதானம் பகுதியில் ஆதார் சேவை மைய கட்டிடம் பழைய நிழற்குடையில் செயல்பட்டு வந்தது. அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பெரிய கட்டிடம் கட்ட பேருராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிழற்குடை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி...
கீழக்கரையில் இன்று மின்தடை
கீழக்கரை, நவ. 18: கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(நவ.18ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிர்புறம் வெல்பர் ஆபீஸ் உள்பகுதி, வடக்கு தெரு, சங்கு மால் தெரு, ரஹ்மானியா நகர், அல்லக்சா நகர், புதுக்குடி தெரு, புது தெரு, ஜாமியா நகர் குளத்தான் மேடு தெற்கு...