இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் கடற்குதிரை பறிமுதல்
ராமநாதபுரம், அக்.7: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50லட்சம் மதிப்பிலான கடற்குதிரைகள், கடல் அட்டைகளை மத்திய புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடற்குதிரை, கடல் அட்டை கடத்த இருப்பதாக மதுரை மத்திய புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழுவினர் ராமநாதபுரம் இசிஆர் சாலையில் ரோந்து பணியில்...
கடல் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்
மண்டபம், அக்.7: அரியமான் கடற்கரையில் வனத்துறை சார்பில், வன உயிரின பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன் ஊராட்சியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரையில் வனத்துறை சார்பில் வன உயிரின பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. வனச்சரக அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கடல் வளத்தைப் பாதுகாக்கவும், கடலில் வாழும் கடல்...
விதிமுறையை கடைபிடியுங்க...!
காரைக்குடி, அக்.4: காரைக்குடியை பொறுத்தவரையில் ஒருசில இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. எதிர் சாலையில் பயணித்தல், ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்துதல் போன்றவற்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. ஆகையால் போலீசார் விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை...
சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு ரூ.4.24 கோடி இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்
சிவகங்கை, அக்.4: சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு குறுவை சாகுபடி பருவத்தில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்த இளையான்குடி, காளையார்கோவில், மனாமதுரை, திருப்புவனம் வட்டாரங்களில் காப்பீடு செய்த 7,348 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி வட்டாரத்தில் 7,202 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே...
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவி தேர்வு
சாயல்குடி. அக். 4: தேனி மாவட்டத்தில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டியில் தமிழகம் அணி சார்பில் குத்துச்சண்டை போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 19 வயது பிரிவில் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி லத்திகாகரன் தங்கம் வென்றார். இதனையடுத்து கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடைபெறும்...
சாலையில் பூசணி உடைக்க கூடாது: திருவாடானையில் விழிப்புணர்வு
திருவாடானை, செப்.30: திருவாடானை பேருந்து நிலையத்தில், மேலூர் வட்டம், வலைசேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், சாலையில் கண் திருஷ்டிப் பொருட்களை உடைப்பது, வெடி வெடிப்பது, பூ மாலைகளை வீசிச் செல்வது போன்ற ஆபத்தான செயல்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் கால்நடைகளுக்கான அபாயங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஒரு கையில் பூசணிக்காயும் மறு கையில் தேங்காயும்...
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது
திருப்புவனம், செப். 30: திருப்புவனம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்புவனம் அருகே பழையனூர் காவல் நிலைய எஸ்.ஐ ராஜாமணி தலைமையிலான போலீசார் வயல்சேரி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் இருவர் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசார்...
திருட்டு சம்பவங்களை தடுக்கக் கோரி மனு
சிவகங்கை, செப். 30: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உரத்துப்பட்டியை சேர்ந்த கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை சுமார் 8க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. 30 பவுன் தங்க நகைகள்,...
இடைக்காட்டூர் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மானாமதுரை, செப். 27: இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. மானாமதுரை இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவங்கியது. தலைமையாசிரியர் புவனேஸ்வரன் முன்னிலையில், திட்ட அலுவலர் ரவிசங்கர் மேற்பார்வையில் இடைக்காட்டூரில் 7 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் முகாம் வருகிற 1ம்...