ஓய்வூதியர் சங்க மாநாடு
சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கையில் தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை 5வது மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் உதயசங்கர் கொடியேற்றினார். லோகநாதன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். கிளை செயலாளர் பாண்டி, பொருளாளர் சிவக்குமார் அறிக்கை சமர்ப்பித்தனர். துணைத்...
ரயிலில் கடத்திய குட்கா பறிமுதல்
ராமேஸ்வரம், ஜூலை 30: ராமேஸ்வரம் பரஸ்பூர் விரைவு ரயிலில் ரயில்வே போலீசார் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்திற்கு (நேற்று வந்த பரஸ்பூர் விரைவு ரயிலை தமிழ்நாடு ரயில்வே போலீசார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். பி2 பெட்டியில் கிடந்த ஒரு மூட்டையை ஆய்வு...
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு
ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கடன் திட்ட அறிக்கை கையேட்டினை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளா அன்பரசு...
திருத்தேர் வலை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 30: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர் வலை கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக அரசு பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி தீர்வு கண்டு வருகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்து அத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி...
பசும்பொன்னிற்கு புறவழிச் சாலை அமைக்க கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 29: பசும்பொன்னிற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கமுதி கோட்டைமேட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் சப்பானி முருகன்...
கீழக்கரையில் சதுரங்க போட்டி
கீழக்கரை, ஜூலை 29: கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அப்துல்கலாம் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செஸ் கழகத்தின் ஏற்பாட்டில் ராமநாதபுரம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, கீழக்கரை ரோட்டரி கிளப், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான 26வது சதுரங்க போட்டியை நடத்தியது. இந்த போட்டியில்...
முளைப்பு திறனை அறிய விதை பரிசோதனை அவசியம்
தொண்டி, ஜூலை 29: விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்வதற்கு விதைப் பரிசோதனை மிகவும் அவசியம். ஒரு விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை மிக துல்லியமாகவும், அதன் வம்சா வழியினை உறுதி செய்யும் விதமாகவும் பரிசோதனை முடிவுகள் இருக்கும். மேலும் விதைப் பரிசோதனை செய்வதால்...
பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
ராமநாதபுரம், ஜூலை 28: ராமநாதபுரத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் நேற்று உயிரிழந்தார். ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் இல்லிமுள்ளி கிராம பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி காளியம்மாள்(56). நேற்று காலை காரைக்குடியில் இருந்து தனது மருமகள் உடன் காரைக்குடியில் இருந்து தனியார் பஸ்சில் ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். இருவரும் பஸ்சில் வந்தபோது பஸ் ராமநாதபுரம் கேணிக்கரை...
திருவாடானையில் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம்
திருவாடானை, ஜூலை 28: திருவாடானையில் சினேகவல்லியம்மன் ஆலய ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருவாடானையில் சினேகவல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆடிப்பூரத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு...