கோயில் திருவிழாவினை முன்னிட்டு பெண்கள் பால்குடம் ஊர்வலம்
திருவாடானை, ஜூலை 26: திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியில் பெரியநாயகி அம்மன் மற்றும் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூக்குழி திருவிழாவானது கடந்த 18ம் தேதியன்று காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக ஒவ்வொரு நாளும் இரவு பெரியநாயகி அம்மன் கோயிலில் கும்மி கொட்டுதல் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு...
அரசு பள்ளியில் மேலாண்மை கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 26: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேலாண்மை குழு தலைவி ராணி தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜூ முன்னிலை வகித்தார். இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களின் நலன் கருதி கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் வேண்டும், பள்ளி...
இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ராமநாதபுரம், ஜூலை 26: விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டியைச் சேர்ந்த நல்லுக்குமார் (23), கமுதி கோட்டைமேட்டில் தாயாருடன் வசித்து வந்தார். இவர், கமுதி-திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் ஜூலை 16ம் தேதி கொலை செய்யப்பட்டநிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் குருவி ரமேஷ்(28), மற்றும் கமுதியை சேர்ந்த மூர்த்தி(25) ஆகிய...
சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம்
சிங்கம்புணரி, ஜூலை 25: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் பெரிய பாலம் கொக்கன் கருப்பர் கோயிலில் ஆடி களரித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு, பெரிய மாடு...
பூப்பந்தாட்ட போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தொண்டி, ஜூலை 25: தொண்டி அருகே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில், வட்டானம் அரசுப் பள்ரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். திருவாடானை குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் 14 வயது மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் வட்டாணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்...
விபத்தில் டிரைவர் பலி
திருப்புத்தூர், ஜூலை 25: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு(40). டிரைவர். இவர் நேற்று அதிகாலை திருப்புத்தூரில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது பெரியகண்மாய் கழுங்கு வளைவு பகுதியில் சென்றபோது டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தில் திருநாவுக்கரசு தலை மோதி படுகாயம் அடைந்து...
மகளிர் குழு பெண்களிடம் ரூ.27 லட்சம் கடன் பெற்று மோசடி: எஸ்பியிடம் புகார்
ராமநாதபுரம், ஜூலை 24: ராமநாதபுரம் அருகே மகளிர் குழு பெண்களிடம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பி தர மறுப்பதாக தம்பதியினர் மீது பெண்கள் மாவட்ட எஸ்.பி சந்தீஷ்யிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் அருகே உள்ள ஆரம்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு பெண்கள், நேற்று ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த...
இணைய வழி கல்வி வானொலி மாணவர்களுக்கு பாராட்டு
பரமக்குடி, ஜூலை 24: பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கவிதா. இவர், பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இணைய வழி கல்வி வானொலி நிகழ்ச்சியின் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக குரல் பதிவு எனும் எளிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களின் வாசிப்பு திறனை...
வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்ததால் கலெக்டரிடம் மனு
ராமநாதபுரம், ஜூலை 23: மீனவரின் சுனாமி வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்த விவகாரத்தில், மீனவர் குடும்பத்துடன் வந்து 2வது முறையாக ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தார். மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் மீனவர்களுக்கு அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிப்பவர் மீனவர் ஷேக் ஜமாலுதீன். வழக்கமாக வீட்டுக்கு ரூ.500 முதல்...