காலாவதி உரம் விற்றால் உரிமம் ரத்து
சிவகங்கை, அக். 11: காலாவதி உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என உரக்கடைகளுக்கு வேளாண் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை மையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்ய கூடாது. விவசாயிகளுக்கு உரிய...
திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
திருவாடானை, அக். 11: திருவாடானை அருகே மங்களக்குடி ஊராட்சி, ஊமை உடையான்மடை பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களக்குடி-நீர்க்குன்றம் நெடுஞ்சாலை பிரிவில் இருந்து ஊமை உடையான்மடை பகுதிக்கு செல்லும் சுமார் 2 கிமீ தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில்...
அரசு தொழிற்பயிற்சி பள்ளி புதிய கட்டிடம் அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு
கமுதி, அக். 11: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - மதுரை சாலையில் கோட்டைமேடு அருகே அரசு தொழிற்பயிற்சி பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மத்திய ஒன்றிய...
கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை
ராமநாதபுரம், அக். 10: கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தேவிப்பட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராஜேந்திரன் (38), மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர், கடந்த 2021ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த...
கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை
ராமநாதபுரம், அக். 10: கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தேவிப்பட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராஜேந்திரன் (38), மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர், கடந்த 2021ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த...
திருவாடானை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
திருவாடானை, அக். 10: திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (57). விவசாயியான இவர் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் டிவி பார்ப்பதற்காக மின் வயரை எடுத்து சுவிட்ச் பாக்ஸில் சொருகியுள்ளார். அப்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற...
மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி
பரமக்குடி, அக்.9:பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(42). 130க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துள்ளார். இவர், நேற்று பார்த்திபனூர் மறிச்சிக்கட்டி பகுதியில், தன்னிடம் வேலை பார்க்கும் தென் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்(46) ஆகியோர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ததில், முத்துக்குமார் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ...
வன உயிரின பாதுகாப்பு தினத்தில் கடற்கரையில் மாணவிகள் தூய்மை பணி
ராமேஸ்வரம்,அக்.9: தேசிய வன உயிரின பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, குருசடை தீவை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். வன உயிரின பாதுகாப்பு வாரம், ஆண்டுதோறும் அக்.2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்திய வனவிலங்கு வாரியத்தால்...
அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா போட்டி
திருவாடானை, அக்.9: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி மன்ற நிதி உதவியுடன் 33 கலைப் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த கல்லூரியில் கலைத் திருவிழாவின் முதற்கட்ட போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்று முடிவடைந்தது. மேலும் இரண்டாம் கட்ட போட்டிகள் கடந்த அக்.6ம் தேதி...