இன்று டாஸ்மாக் விடுமுறை
சிவகங்கை, ஆக. 15: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். மேலும் மதுக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள், லைசென்ஸ் பெற்ற மதுபானக்கூடங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுபானக்கூடங்கள் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டிருக்கும். ...
பிரதமரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காரைக்குடி, ஆக, 14: காரைக்குடியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மீனா சேதுராமன், உள்ளாட்சி மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் சகாயம், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மணவழகன்,...
கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம்
ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. இங்கு இறந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் தீயனைப்புத்துறை வீரர்களின் உதவியோடு உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட...
வீடுகளுக்கு வரும் ரேஷன் பொருள்கள் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பரமக்குடி,ஆக.14: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை, போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டி தட்டியில் முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும், தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட...
நூலகர் தின கொண்டாட்டம்
சிவகங்கை, ஆக. 13: சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் இந்திய நூலகத்துறையின் தந்தையாக போற்றப்படும் சீர்காழி ராமாமிர்த ரெங்ககாதனின் 133வது பிறந்த தினத்தினை நூலகர் தினமாக கொண்டாடப்பட்டது. இவர் நூலகப் பகுப்பாய்வு முறையை கொண்டு வந்ததின் விளைவாக, நூலகத்தந்தை என போற்றப்படுகிறார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி, தலைமை வகித்து நூலகத் தந்தையின் உருவப்படத்திற்கு...
விதிமீறி மீன் பிடிப்பு மீனவர்களிடம் விசாரணை
தொண்டி, ஆக.13: தொண்டி கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து சென்ற போது அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அதிக ஒளி பாய்ச்சி விளக்கு வைத்து மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொண்டி மீன்வளத் துறை ஆய்வாளர் அபுதாஹிர், எஸ்ஐ அய்யனார், குருநாதன் உள்ளிட்ட போலீசார்...
மாரியம்மன் ஆலய திருவிழா
தொண்டி, ஆக.13: தொண்டி அருகே கடம்பனேந்தல் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோயில் 30ம் ஆண்டு ஆடி பால்குட உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டப்பட்டது. நேற்று பக்தர்கள் கரகம், பால்காவடி, வேல் காவடி, தீசட்டி உள்ளிட்ட காவடி எடுத்து பூக்குழி இறங்கினர். அன்னதானம் நடைபெற்றது. கிராம மக்கள் கோயிலின்...
பொதுக்குழு கூட்டம்
திருப்புத்தூர், ஆக.11: திருப்புத்தூரில் வர்த்தக சங்ரத்தின் 50ம் ஆண்டு பொன்விழா பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். கூடுதல் துணைத் தலைவர்கள் பிச்சைமுகமது, நாகராஜன், உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் மருதுபாண்டியர் அரசு மருததுவமனைக்கு நவீன மருத்துவ வசதிகளை அதிகரித்தும், கூடுதல் மருத்துவர்களை...
புதிய ரேஷன் கடை பொதுமக்கள் கோரிக்கை
திருவாடானை, ஆக.9: திருவாடானை அருகே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இக்கட்டிடம்...