அரசு வீடுகள் பெற்றவர்களுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி
சிவகங்கை, ஆக.22: அரசு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை தொகை செலுத்தாத நிலையில் வட்டி தள்ளுபடி போக மீதி தொகையை ஒரே தவணையாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ராமநாதபுரம் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை...
விபத்தில் லாரி உரிமையாளர் பலி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
சிவகங்கை, ஆக.22: சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே லாரி உரிமையாளர் மரணத்திற்கு ரோந்து போலீசாரே காரணம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன்(36). இவரது மனைவி ரோஜா(25), மகள் சிவான்ஷிகா(3) மற்றும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தினகரன் சொந்தமாக...
குறுவட்ட விளையாட்டுப் போட்டி
காளையார்கோவில், ஆக. 19: இளையான்குடி குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி சகாயராணி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில்ல பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் வெற்றி பெற்றனர். 11 வயது பிரிவில் சஞ்ஜீவி சக்தியன் முதலிடம், யாஷினிகா முதலிடம், ஹரிஷ் 2 இடம் பிடித்தனர். வயது 14 பிரிவில் கிஷோர்...
பரமக்குடியில் முப்பெரும் விழா
பரமக்குடி,ஆக.19: பரமக்குடியில் முதுகலைத் தமிழாசிரியர் அவையத்தின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கர்ணன் தலைமை வகித்தார். ஆசிரியை ஜெகதீஸ்வரி வரவேற்றார். ஏஐஏடிஏ ஆசிரியர் அமைப்பின் மாநிலத் தலைவர் தலைமையாசிரியர் பாரதிராஜன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன். முன்னாள்...
சாலையை சீரமைக்க கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம், ஆக.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நாகனேந்தல், காவனூர் செல்லும் சாலை ேசதமடைந்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் உள்ள நாகனேந்தல் மற்றும் காவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து...
அரசு பஸ் மோதி டைம் கீப்பர் உடல் நசுங்கி பலி
ராமநாதபுரம், ஆக.18: தேவிப்பட்டிணத்தில், அரசு பஸ் மோதி டைம் கீப்பர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே உள்ள கொத்தியார் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு (65). தேவிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் தற்காலிக டைம் கீப்பராக பணியாற்றி வந்தார். நேற்று பஸ் நிலையத்தில்...
அம்மன் கோயில் நடை திறப்பு
சாயல்குடி, ஆக.18: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையான உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான அம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழாக்கள், செவ்வாய், வெள்ளிகளில் சிறப்பு வழிபாடு, பொங்கல் வைத்தல், கூல் காய்ச்சி ஊத்துதல், பால்குடம், அக்னிச்சட்டி, ஆடிப்பூரம், சுமங்கலி...
கும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
ராமநாதபுரம், ஆக.18: உச்சிப்புளி அருகே கும்பரம் ஊராட்சியில் கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, ஏ,டி.நகர், கோகுல் நகர், கல்கண்டு வலசை, கிருஷ்ணா நகர், கும்பரம் வடக்கு, கும்பரம் தெற்கு, மற்றும் படைவெட்டி வலசை, மணியக்கார வலசை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவானந்தம் தலைமை...
உணவகங்கள் விருது பெற விண்ணப்பம்
சிவகங்கை, ஆக. 15: பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவைகளை பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல்...