கானாடுகாத்தான், சருகணியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை, செப்.3: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை கானாடுகாத்தான், சருகணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6...
திருப்புவனம் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
திருப்புவனம்: திருப்புவனம் புஸ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்பாள் கோயில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் தேவஸ்தானம் மற்றும் கிராமப் பொதுமக்கள் நடத்துவதற்கு முடிவு செய்து கடந்த ஜூலை 7ம் தேதி பாலாலய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் ராஜகோபுர திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கோபுரத்தில் சேதமான சுதை சிற்பங்களை புனரமைப்பு செய்வதற்காக...
கமுதி அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு 361 பேர் மனு
கமுதி, செப்.2: கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் முஷ்டகுறிச்சி, முதல்நாடு, கே.நெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்கள் ராம், சேதுராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், திமுக...
முளைப்பாரி ஊர்வலம்
சாயல்குடி, செப்.2: கடலாடி இந்திரா நகர் சந்தனமாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலி பூஜை...
திருவாடானை அருகே வாலிபர் தற்கொலை
திருவாடானை, செப்.2: திருவாடானை அருகே திருவடிமிதியூர் கிராமத்தைச் சேர்ந்த சேசுராசய்யா மகன் பிரான்சிஸ் செழியன்(25). இவர், சென்னையில் ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் பிரான்சிஸ் செழியன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்குச்...
திமுக நிர்வாகி மீது தாக்குதல்
திருப்புவனம், ஆக. 30: திருப்புவனம் அருகே லாடனேந்தல் திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா (48). திமுக மாவட்ட பிரதிநிதி. நேற்று காரிலிருந்து 10 பேர் கொண்ட கும்பல் வேகமாக இறங்கி சுப்பையா வீட்டுக்குள் சென்று அவரை சரமாரியாக தாக்கியது. வீட்டின் முன்பாக நின்ற கார் கண்ணாடியையும் உடைத்து விட்டு ஓடிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த...
சிறுமிக்கு பாலியல் தொல்லை பைனான்சியருக்கு 12 ஆண்டு சிறை
சிவகங்கை ஆக. 30: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (53). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து...
‘‘டான்ஸ் ஆடணும் பாட்டு போடு’’ ஆடியோஸ் உரிமையாளரை தாக்கிய நான்கு பேர் கைது
காரைக்குடி, ஆக. 30: காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் போஸ் மகன் மணிமுத்து. இவரும் இவரது அண்ணன் திருமுருகபாண்டியனும் ஆடியோஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 27ம் தேதி இரவு திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அபிராமி மகாலில் டியோ செட்டை கழட்டி கொண்டு இருந்துள்ளனர். அப்போது ரயில்வே ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் தங்கசாமி...
தேவகோட்டை அருகே பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள்
தேவகோட்டை, ஆக.29: திருச்சி-ராமேஸ்வரம் பைபாஸ் சாலையில் தேவகோட்டை சிவந்தான்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணமாக இந்த இடத்தில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையில் நடுவில் சிறிய அளவில்...