முதல்வரின் சீர்மிகு நல்லாட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது: மாங்குடி எம்எல்ஏ பேச்சு
காரைக்குடி, நவ.26: முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு நல்லாட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது என, மாங்குடி எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடி முதல் ஏம்பல் வரை மகளிர் விடியல் பயணம் டவுன்பஸ் சேவை துவக்க விழா நடந்தது. துணைமேயர் குணசேகரன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி பஸ் சேவையை துவக்கி வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தொடரும் மணல் திருட்டு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையம் தெற்கு பகுதியில் உள்ள மல்லிகை நகர் மணல் மேடு பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கட்டுமானம் மற்றும் வியாபார பயன்பாடுக்கு சிறிய வண்டிகளை பயன்படுத்தி சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு...
இடையமேலூரில் நாளை மின்தடை
சிவகங்கை, நவ. 26: இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி, மேலப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை...
அரசு நடுநிலைப்பள்ளியில் களைகட்டிய இயற்கை உணவு திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்
ராமேஸ்வரம், நவ. 26: ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி எண்.1ல் நேற்று இயற்கை உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் இராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் செய்த...
‘கார்த்திகை மாதம் மாலை அணிந்து... நேர்த்தியாகவே விரதம் இருந்து...’ மண்டல விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
ராமநாதபுரம், நவ. 18: கார்த்திகை மாத முதல் நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கடலில் தீர்த்தமாடி மாலை அணிந்து மண்டல விரதத்தை துவங்கினர். கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் கார்த்திகை 10ம் தேதி வரை மாலை அணிந்து ஒரு...
கடலாடி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
சாயல்குடி, நவ. 18: ராமநாதபுரம் மாவட்டம் ,கடலாடி அடுத்துள்ள ஆப்பனூர் அரியநாதபுரம் கிராமத்தில் வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் 19ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை...
மண்டபம் பகுதியை நனைத்த தூறல் மழை
மண்டபம், நவ. 18: மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கள் கிழமை முழுவதும் தூறல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதி மற்றும் மண்டபத்தை சுற்றியுள்ள மரக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோன்வலசை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தூரல் மழை...
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம், நவ.15: 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியில் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயல் ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியின் பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள்...
தொண்டி கடற்பகுதியில் வெடி வைத்து மீன் பிடிப்பதை தடுக்க மீனவர்கள் கோரிக்கை
தொண்டி, நவ.15: அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி வைத்து மீன் பிடிப்பது தொண்டி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடுகடலின் ஆழமான பகுதியில் மரங்களை வேறுடன் பிடிங்கி நட்டு வைக்கப்படும். இந்த மரங்களின் அருகில் ஆயிரக்கணக்கான மீன்கள் கூட்டமாக வசிக்க வரும் அவ்வாறு வரும் போது வெடியை வெடிக்க செய்து அனைத்து மீன்களையும் பிடித்து...