கடலாடி அருகே சோகம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
சாயல்குடி, செப். 19: கடலாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலாடி அருகே ஒருவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு கட்டுமானப் பணிக்காக கம்பி அறுத்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக மின்சாரத்தை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த...
பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு சிறை
சிவகங்கை, செப்.18: காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்தவர் பாண்டி(38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் கல்லலில் ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்ட சென்றிருந்தார். அந்த வீட்டின் அறையில் 17வயது சிறுமி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். பாண்டி அறைக்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில்...
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
தொண்டி, செப்.18: தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் நாள் மற்றும் சர்வ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதினாலும், புரட்டாசி முதல் நாள் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொண்டி தேவி,...
ராமேஸ்வரம் கடற்கரையில் 600 கிலோ குப்பைகள் அகற்றம்
ராமேஸ்வரம், செப்.18: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும் இணைந்து ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மைப்...
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை
ஆர்.எஸ்.மங்கலம், செப்.17: ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுவதால், உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோக இருக்காது என மின்வாரிய அதிகாரி அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்காேட்டை, சிலுகவயல், இந்திரா...
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
மண்டபம்,செப்.17: காரன் ஊராட்சி மல்லிகா நகர் பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் அப்பகுதியில் சேதம் அடைந்த செம்மண் சாலையை அகற்றி விட்டு, தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் காரன் ஊராட்சியில் மல்லிகை நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு...
கீழக்கரையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
கீழக்கரை, செப்.17: கீழக்கரையில் திமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, மூர் பிரதர்ஸ் சார்பில் வார்டு கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் நினைவு...
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, செப். 16: சிவகங்கையில் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க சங்கம் சார்பில் கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணக்குமார் வரவேற்றார்.மாநில செயலாளர் சரவணக்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். இதில் பொருளியல்...
விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
காரைக்குடி, செப். 16: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் திருப்பத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர் தின விழா கொண்டாப்பட்டது. கல்லூரியின் அமைப்பியர் துறை தலைவர் ஆண்ட்ரூஸ் ஹெப்சிபா வரவேற்றார். கல்லூரி தலைவர் சொக்கலிங்கம் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் சசிகுமார் துவக்கிவைத்தார். பொறியாளர் அருணாச்சலம், அசோசியேசன்...