கந்தர்வகோட்டை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்
கந்தர்வகோட்டை, ஜூலை 10: ‘ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்’ என்பர் அந்த அளவிற்கு ஆடி காற்று கடுமையாக வீசும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் காற்று கடுமையாக வீசி வருகினறது. இதனால், வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள் ஓடிந்து பாதிக்கின்றன. மேலும், சாலையோரங்கள் உள்ளிட்ட...
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப் படுத்த இணையதளத்தில் 2026 ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூலை 10: கடந்த 2011 ஜனவரி 1ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் ஆடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30 வரை விண்ணப்பிக்கலாம். அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த...
கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சியில் ரூ.3.30 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
புதுக்கோட்டை, ஜூலை 10: கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சிப் பகுதிகளில், பல்வேறு புதிய திட்டப் பணிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின்...
விளாப்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
விராலிமலை, ஜூலை 9: விராலிமலை அருகே உள்ள விளாப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வீரப்பட்டி சரகம், விளாப்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து...
மேலத்தானியம் முத்து மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா
பொன்னமராவதி, ஜூலை 9: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் சுவாமி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில், கடந்த 29-ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, மண்டகபடிதாரர்கள் சார்பில் நாள்தோறும் அம்மன் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்,...
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கறம்பக்குடி, ஜூலை 9: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கருக்கா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், விவசாயி, இவரது, வளர்த்து வந்த ஆடு ஒன்று நேற்று மதியம் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அருகே உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய...
கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவி வெற்றி
கந்தர்வகோட்டை, ஜூலை 8: தமிழக அரசு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 29 முதல மே 5 வரை ‘தமிழ் வாரம்’ கொண்டாடவும், அதில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்த உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை...
வடவாளத்தில் வழிபாட்டு உரிமை கோரிஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு அப்பகுதியிலுள்ள செல்லாயி அம்மன் மற்றும் கலியுக மெய்ய அய்யனார் கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள்...
ஆலங்குடியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பினை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்பதை அந்தெந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி தமிழ்நாடு...