புதுகை, காரையூர் வட்டார மருத்துவ அலுவலருக்கு சுகாதார அமைச்சர் விருது வழங்கி பாராட்டு

  பொன்னமராவதி, ஜூலை 2: தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜனுக்கு சிறந்த மருத்துவர் விருதினை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேசிய மருத்துவர் தினம் நிகழ்ச்சி நடந்தது. அதில், மருத்துவத்துறையில் மகத்தான பணி செய்த 50 மருத்துவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது....

தீத்தானிப்பட்டியில் கிணற்றுக்குள் விழுந்த மாடு மீட்பு

By Arun Kumar
01 Jul 2025

  கறம்பக்குடி, ஜூலை 2: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, விவசாயி. இவரது மாடு அப்பகுதி வேளாண் நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும்போது, தவறி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து, கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்...

பொன்னமராவதி ராஜா ராஜா சோழீஸ்வரர் கோயிலில் மாணிக்க வாசகர் குருபூஜை

By Francis
29 Jun 2025

  பொன்னமராவதி, ஜூன் 30: பொன்னமராவதி சிவன் கோயிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவ ட்டம், பொன்னமராவதி ஆவுடையநாயகி அம்பாள் சமேத ராஜா ராஜா சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் குழு சார்பில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக...

கம்பன் கழகம் தகவல் புதுக்கோட்டையில் உலகத் திருக்குறள் பேரவை பொதுக்குழு

By Francis
29 Jun 2025

  புதுக்கோட்டை, ஜூன் 30: புதுக்கோட்டையில் உலகத் திருக்குறள் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு, தலைவர் சத்தியராம் இராமுக்கண்ணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் புலவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், வருடத்திற்கு ஒருமுறை சிறைக் கைதிகளுக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கி திருக்குறள் கருத்துக்கள் பற்றிய சிந்தனையுரை, வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு கல்லூரியில்...

புதுகையில் ஜூலை 18ம் தேதி முதல் 27 வரை கம்பன் பொன்விழா

By Francis
29 Jun 2025

  புதுக்கோட்டை, ஜூன் 30: புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் வரும் ஜூலை 18 முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள், 50ஆவது ஆண்டு கம்பன் பொன் பெருவிழா நடைபெறவுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கம்பன் கழகத்தின் விழாக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, பொன் பெருவிழாவின் தேதியை கம்பன் கழகத்தின் தலைவர். ராமச்சந்திரன் நேற்று...

வார்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் விடியல் விருந்து

By Ranjith
27 Jun 2025

  பொன்னமராவதி, ஜூன் 28: பொன்னமராவதி அருகே வார்பட்டு ஊராட்சியில் திமுக.வின் விடியல் விருந்தினை 25வது நாளாக அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்படுகிறது. அதில், 25வது நாளாக...

கந்தர்வகோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

By Ranjith
27 Jun 2025

  கந்தர்வகோட்டை, ஜூன் 28: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் முன் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வட்டார வள பயிற்றுநர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு...

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப்பெற்ற சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

By Ranjith
27 Jun 2025

  புதுக்கோட்டை, ஜூன் 28: சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அஞ்சலிதேவி தங்கமூர்த்தி மற்றும் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவரான தங்கம்மூர்த்தி மாணவிகளுக்கு பரிசுத் தொகையினை...

கறம்பக்குடி பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

By Arun Kumar
26 Jun 2025

  கறம்பக்குடி, ஜூன் 27: கறம்பக்குடி பகுதியில் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். ஆனால் நேற்று காலை கடும் வெயிலடித்த வேளையில் மாலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரம் கறம்பக்குடி பகுதி முழுவதும்...

சேந்தன்குடி ஊராட்சி பகுதியில் ரூ.7.26 லட்சத்தில் புதிய சாலை அமைப்பு

By Arun Kumar
26 Jun 2025

  புதுக்கோட்டை, ஜூன் 27: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேந்தன்குடி ஊராட்சி பகுதியில், ரூ.7.26 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்; ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில்...