தமிழ் நாட்டை சேர்ந்த புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயண மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூலை 17: தமிழ் நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம், 120 பேருக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்...
புதுக்கோட்டையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 16: ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நேற்று முதல் வரும் அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும்....
பொற்பனைக்கோட்டை 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு தமிழ்நாடு தொல்லியல்துறை தகவல்
புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை அடுத்த பொற்பணைகோட்டையில் தமிழகத் தொல்லியத் துறை சார்பில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அடுத்த வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கின. மொத்தம் 17 குழிகள்...
அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் கீரனூர் பிரிவு சாலையில் சிசிடிவி கேமரா
இலுப்பூர், ஜுலை 15: அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் கீரனூர் பிரிவு சாலையில் புதிய கண்காணிப்ப கேமரா பயன்பாட்டிற்கு வந்தது. அன்னவாசல் பகுதியில் பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்னவாசல் காவல் நிலைய சரகப்பகுதி அதிக கிராமங்களை கொண்ட பகுதியாகும். ஆதிகமான போக்குவரத்து உள்ள பகுதியிலும் மக்கள் நடமாடும் பகுதியிலும்...
நமணசமுத்திரம் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
திருமயம்: திருமயம் அருகே பள்ளி மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த...
‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று தொடக்கம்
புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள்/திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று எடுத்துரைத்து, அவர்கள் எளிதில் பயனடையும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அதில், புதுக்கோட்டை...
சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு
அறந்தாங்கி, ஜூலை 14: அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு புதிய கட்டடம் கட்டுவதற்க்கு தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் நன்றி தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மருத்துவமணையில் உள் நோயாளிகள்,...
சடையம்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் சம உரிமை கோரி எம்எல்ஏவிடம் மனு
பொன்னமராவதி, ஜூலை 14: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் சம உரிமை கோரி தேவேந்திர குல வேளாளர் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தேவேந்திர குல...