புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

  புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில், பெறப்படும் விண்ணப்பங்களின் மீது...

புதுகை கம்பன் விழா நிறைவு

By Ranjith
27 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா கடந்த ஜூலை 18ஆம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தினமும் மாலை 5.30 மணிக்கு நகர்மன்றத்தில் நடைபெற்ற இந்தப் பொன் பெருவிழாவில், மாநிலம் முழுவதும் உள்ள கம்பன் சொற்பொழிவாளர்கள் கலந்து...

புதுக்கோட்டை மாநரக பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

By Ranjith
27 Jul 2025

  புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்பதை அந்தெந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி; தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் புதுக்கோட்டை மாநகரம்...

பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு: அம்மன்குறிச்சி ஊராட்சியில் திமுகவின் விடியல் விருந்து

By Suresh
26 Jul 2025

பொன்னமராவதி, ஜூலை 26: பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி ஊராட்சியில் திமுகவின் விடியல் விருந்து நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட திமுக, திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி, நேற்று 53 வது நாளாக பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் அம்மன்குறிச்சி ஊராட்சி அம்மன்குறிச்சியில் பொதுமக்களுக்கு பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி,...

ஆடி இரண்டாவது வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

By Suresh
26 Jul 2025

விராலிமலை, ஜூலை 26: ஆடி வெள்ளியையொட்டி, விராலிமலை பகுதி அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர்.அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித் தபசு, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பௌர்ணமி,...

வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

By Suresh
26 Jul 2025

விராலிமலை, ஜூலை 26: குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டத்தில் தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ஆயிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 3வது நாள் முகாமில்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

By MuthuKumar
24 Jul 2025

அறந்தாங்கி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது....

திமுக விடியல் விருந்து

By MuthuKumar
24 Jul 2025

பொன்னமராவதி, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்ட திமுக, திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் அண்ணாமலை ஒருங்கிணைப்பில் திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதன்...

கந்தர்வக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம்

By MuthuKumar
24 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வகோட்டைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ விஜயபாஸ்கார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக வெள்ளை...

புதுக்கோட்டை வருவாய் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

By MuthuKumar
23 Jul 2025

புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் விவசாயிகளின் தேவைகளை பெற உதவும் ”உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட முகாம் வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது.இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசால் வேளாண்மை-உழவர்...