கீரனூர் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 84 ஆயிரம் பறிமுதல் செய்து, சார்பதிவாளர், தரகர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு...
செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கரையப்பட்டி பகுதி மக்களுக்கு ஒருவாரமாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி...
கல்லணை கால்வாய் பாசனத்தார் சங்கம் சார்பில் நீர்வளத்துறை அலுவலகத்தில் மனு
அறந்தாங்கி, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ரமேஷ் நீர்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார். திருச்சி நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர் சிவக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லன்ணைகால்வாய் வழியாக 168 ஏரி வாயிலாக 32 ஆயிரம் ஏக்கர்...
அரிமளம் அருகே கோயிலில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக பிரச்னை
திருமயம். ஜூலை 29: அரிமளம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மீனிகந்தா கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த சேது விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் பல்வேறு காரணங்களுக்காக பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யாமல்...
வேளாண் விவசாயிகள் கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 31ம் தேதி கடைசி
விராலிமலை,ஜூலை 29: காரீப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விராலிமலை வட்டாரம் சார்ந்த வேளாண் விவசாயிகள் ”பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா” பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிவாரணம் பெறலாம். என்று விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்....
புதுக்கோட்டை மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா: போட்டிகளில் வென்றோருக்கு பரிசு; கலெக்டர் அருணா வழங்கினார்
புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில், பெறப்படும் விண்ணப்பங்களின் மீது...
புதுகை கம்பன் விழா நிறைவு
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50ஆம் ஆண்டுப் பொன் பெருவிழா கடந்த ஜூலை 18ஆம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தினமும் மாலை 5.30 மணிக்கு நகர்மன்றத்தில் நடைபெற்ற இந்தப் பொன் பெருவிழாவில், மாநிலம் முழுவதும் உள்ள கம்பன் சொற்பொழிவாளர்கள் கலந்து...
புதுக்கோட்டை மாநரக பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்பதை அந்தெந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி; தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் புதுக்கோட்டை மாநகரம்...