ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ஜெயங்கொண்டம், ஜூலை 10: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது. அப்போது, நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி, மாவுப்பொடி,...
கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து, மேசைபந்து போட்டிகள்
குன்னம், ஜூலை 10: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேப்பூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. கிழுமத்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தாவுத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளை, கீழப்பெரம்பலூர் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன்...
பெரம்பலூரில் உணவு பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர் முகாம்
பெரம்பலூர், ஜூலை 10: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின்...
குரும்பலூர் மஹா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் மஹா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குரும்பலூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் மஹா மாரியம்மன் கோயில் தேர்திருவிழா, கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பூச்சொரிதல் மற்றும் ஜூலை 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ெ பாங்கல்...
ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த பெண்
ஜெயங்கொண்டம், ஜூலை 9: அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பதாக கூறி, வீடுகளை இயந்திரங்கள் கொண்டு இடிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மருதூர் கிராமத்தில் நீர்நிலைப் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்...
பெரம்பலூரில் நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன், மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில், ஃபீல்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் பணி செய்து வருபவர்களுக்கு,...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
பெரம்பலூர்,ஜூலை 8: பெரம்பலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் 20 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகர் கூட்ட அரங்கில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று(7ம்தேதி) திங்கட் கிழமை காலை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...
அரியலூர் அண்ணாசிலை அருகே கிராமங்களில் செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்
அரியலூர், ஜூலை 8: அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியினை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. கிராமங்களில் உடனடியாக சுகாதார செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய...
எடையாளர்கள் நியமிக்கக் கோரி ரேசன் கடை பணியாளர் காத்திருப்பு போராட்டம்
அரியலூர், ஜூலை 8: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் விடுப்பெடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், டிஎன்டிஎஸ்சி எடைத் தராசும், நியாய விலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியானஎடையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்து...