அனுக்கூர், கல்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்பு

  பெரம்பலூர், ஜூலை 2: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த கஜபதி, வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த செல்வகுமார் ஆகியோர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன....

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் ரூ.7.60 கோடியில் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள்

By Arun Kumar
01 Jul 2025

  ஜெயங்கொண்டம், ஜூலை 2: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிமடம் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திரவக்கழிவு மேலாண்மை திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ், ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்...

குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் பொது மருத்துவ முகாம்

By Francis
29 Jun 2025

    குன்னம், ஜூன் 30: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் திட்டக்குடி அருண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகளிர் நலம் மற்றும் எலும்பு மூட்டு தேய்மான பிரச்சனைகளுக்கு அருண் மருத்துவமனை மருத்துவர் கொளஞ்சிநாதன்...

பெரம்பலூர் /அரியலூர் ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தல்

By Francis
29 Jun 2025

    ஜெயங்கொண்டம், ஜூன் 30: ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் எனக்கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் போக்கை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சங்கத்தின்...

அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம்

By Francis
29 Jun 2025

  அரியலூர், ஜூன் 30: அரியலூர் சிஐடியு சங்க அலுவகத்தில் சிஐடியு மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வேலை சம்மந்தமாக மாவட்ட செயலாளர் துரைசாமி பேசினார். அப்போது, ஜூலை 9-ந் தேதி மாவட்ட முழுவதும் அனைத்து சங்கம் சார்பாக 650பேர்...

பேரளி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

By Ranjith
27 Jun 2025

  குன்னம், ஜூன்28: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரளி பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து பனியில் மேற்கொண்டு வந்த நிலையில் ஆலத்தூர் வட்டம் விஜய கோபாலபுரம் அபிமன்னன் மகன் மதியழகன் (37)...

உடையார்பாளையம் அரசு பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

By Ranjith
27 Jun 2025

  ஜெயங்கொண்டம், ஜூன் 28: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமையில், காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவிகள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊரின்...

செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ.17.64 லட்சம் உண்டியல் காணிக்கை

By Ranjith
27 Jun 2025

  பாடாலூர், ஜூன் 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சாமி கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அறநிலைத் துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில்...

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

By Arun Kumar
26 Jun 2025

  பெரம்பலூர், ஜூன் 27: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழியை காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். மேலும்...

ஹெச்.எம்முக்கு கொலை மிரட்டல்

By Arun Kumar
26 Jun 2025

  ஜெயங்கொண்டம், ஜூன் 27: ஜெயங்கொண்டம் அருகே ஹெச்.எம்முக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்தவர் தமிழ்முருகன்(48). விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காட்டாத்தூரை சேர்ந்த விசிக பிரமுகர்கள் பாக்கியராஜ்(35), வேல்முருகன்(49) ஆகியோர் கடந்த ஒரு...