ஆண்டிமடம் அருகே லயன் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜெயங்கொண்டம், டிச.8: ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேனிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் இயக்கம் மற்றும் ஜெயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் இணைந்து, மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. இதில் தாளாளர் அருட் தந்தை தாமஸ் லூயிஸ் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்...

பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழப்பு

By Ranjith
4 hours ago

குன்னம், டிச.8: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழந்தது. அரியலூர் சாலையில் உள்ள சித்தளி வன காப்பு காட்டிலிருந்து அருகிலுள்ள பேரளி கிராமத்திற்கு நேற்று காலை பெண் மான் ஒன்று வழி தவறி வந்தது. பேரளி ஊராட்சி மன்ற அலுவலகம், பிள்ளையார் கோவில் வழியாக நடுத்தெரு சென்று...

பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு

By Ranjith
5 hours ago

பாடாலூர், டிச.8: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாட்கோ சார்பில்,பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தினை நேற்றுமுன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆய்வகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து...

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

By Arun Kumar
06 Dec 2025

  பெரம்பலூர், டிச.7: பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நாள் தினத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாநில...

வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபர் கைது

By Arun Kumar
06 Dec 2025

  பெரம்பலூர்,டிச.7: வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜேந்திரன்(55). இவர் தனக்கு சொந்தமான வயலில் சாராய ஊரல் போட்டு உள்ளதாக பெரம்பலூர் ஊரக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல்...

அத்தியூர் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு

By Arun Kumar
06 Dec 2025

  குன்னம், டிச.7: வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் அத்தியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அத்தியூர் குடிக்காடு, புதுப்பேட்டை கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நடைபெற்றது. அங்கன்வாடி மையம், பள்ளி வளாகங்கள், கோயில்கள், வீடுகள் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்...

ஜெயங்கொண்டம் ஊழல் தடுப்பு இயக்கங்களில் மக்கள் பங்கேற்க வேண்டும்: மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை

By Arun Kumar
05 Dec 2025

  ஜெயங்கொண்டம், டிச. 6: அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மையத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் ஆய்வாளர் கவிதா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊழல் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக உள்ளது என்றும், அரசு தேர்விற்கு...

ஜெயங்கொண்டம் பகுதியில் இன்றைய மின்தடை

By Arun Kumar
05 Dec 2025

  ஜெயங்கொண்டம் டிச.6:ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இன்று (சனிக்கிழமை) காலை 9மணிமுதல் பணி முடியும் வரை 110/33-11 கி.வோ ஜெயங்கொண்டம் துணைமின் நிலையம், 33/11 கி.வோ தா.பழுர் துணைமின் நிலையம் மற்றும் 33/11கி.வோ தழுதாழைமேடு துணைமின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மாதாந்திர பணிகள் நடைபெற...

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி

By Arun Kumar
05 Dec 2025

  பெரம்பலூர், டிச. 6: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு...

சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி

By Arun Kumar
04 Dec 2025

  தா.பழூர், டிச.5:தா.பழூர் வட்டாரத்தில் சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சியில் 140 இளைஞர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய திறன் பள்ளி மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்ப்பை தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்...