ஆலத்தூர் தாலுகாவில் ரேஷன் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்த வட்ட வழங்கல் அலுவலர்

  ஆலத்தூர், டிச.3: தாயுமானவர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலத்தூர் தாலுகாவில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர் சசிகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு...

அரசு பஸ் மோதி 4 பேர் காயம்

By Arun Kumar
02 Dec 2025

  பாடாலூர், டிச.3: அல்லிநகரம் ரவுண்டானா பகுதியில் நின்ற லாரி மீது அரசு பஸ்மோதி 4 பேர் காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூரில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம் எசனை அஞ்சாம் நகர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் பிரபு (52...

திருமானூர் ஒன்றியத்தில் 592 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி

By Arun Kumar
01 Dec 2025

  அரியலூர்,டிச.1: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 592 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் நேற்று வழங்கப்பட்டது. திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழாப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குருவாடி...

பொதுமக்கள், கால்நடைகள் சாலையை கடக்க நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அகற்றி பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை

By Arun Kumar
01 Dec 2025

  அரியலூர், டிச. 1: வாகனங்கள் திரும்ப, பொதுமக்கள், கால்நடைகள் சாலையை கடக்க நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனை அகற்றி பாதை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் செந்துறை நான்கு வழி சாலையில் நீண்ட தூரங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அமைக்கப் பட்ட சென்டர் மீடியனால் பொதுமக்கள், கால்நடைகள் கடும் அவதி படுகின்றனர். லாரிகள்,...

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

By Arun Kumar
01 Dec 2025

  குன்னம், டிச.1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கட்டிட அனுமதி வேண்டி அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகின்றனர். கடந்த ஒரு...

தமிழர் நீதி கட்சி, ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

By Ranjith
29 Nov 2025

ஜெயங்கொண்டம், நவ.29: தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் மறைந்த ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தனது...

மங்களமேடு காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

By Ranjith
29 Nov 2025

குன்னம், நவ.29: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மங்களமேடு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கமலஹாசன் திருச்சி துவாக்குடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நந்தகுமார் பதவி உயர்வு பெற்று மங்களமேடு காவல் ஆய்வாளராக பொறுப்பு...

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து

By Ranjith
29 Nov 2025

பாடாலூர், நவ.29:தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 27-ம் தேதி இவரது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல பெரம்பலூரில் கட்சி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உதயநிதி...

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நல விடுதி

By MuthuKumar
27 Nov 2025

குன்னம், நவ.28: வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமூக நல விடுதியை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர்...

குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடும் அவலம்

By MuthuKumar
27 Nov 2025

குன்னம், நவ.28: குன்னம் அருகே ரெட்டிக் குடிக்காடில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சியில் ரெட்டிக் குடிக்காடு தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் பராமரிக்காமல் முட்புதர்கள் நிறைந்து மழை நீரும் கழிவுநீரும் கலந்தோடி வீட்டிற்குள் புகுந்து...