பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
பெரம்பலூர், ஜூலை 6:பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது கூட்டத்திற்கு தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக...
கீழப்பழுவூர் அருகே மின் கசிவால் கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்
அரியலூர், ஜூலை 6. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசமானது. கீழப்பழுவூர் அடுத்த வல்லகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் வயது (40). இவர், அதே கிராமத்தில் உள்ள தனது வயல் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள கொட்டகை...
அரியலூரில் வேலைவாய்ப்பு இயக்குனரை கண்டித்து தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஜூலை 5: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரைக் கண்டித்து அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் முன்பாக தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தை சார்ந்த கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றாமல், சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி, வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் மற்றும்...
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு
ஜெயங்கொண்டம், ஜூலை 5: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், அன்புச்செல்வன், பொறியாளர்கள் ராஜா சிதம்பரம், சித்ரா, ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள்...
தா.பழூர் சிவாலயத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி கலசாபிஷேகம்
தா.பழூர், ஜூலை 5: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் வரும் 7ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வரா பூஜை, புண்ணியாஹ வாசனம், யாகசாலை நிர்மானம், பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், தீர்த்தஸங்கரஹணம் நடைபெற்றது....
மருமகளுக்கு அரிவாள் வெட்டு
ஜெயங்கொண்டம், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நடுக்கொலப்படி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (83) இவரது மகன் நமச்சிவாயம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். நமச்சிவாயத்தின் மனைவி சசிகலா அவரது குழந்தைகள் மற்றும் மாமனார் பரமசிவம் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரமசிவத்திற்கு சசிகலா காலை முதல்...
வளர்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
ஜெயங்கொண்டம், ஜூலை 4: வளர்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் மா, பலா, வாழை, திராட்சை,...
தா.பழூர் சிவாலயத்தில் வாஸ்து சாந்தி பூஜை
தா.பழூர், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் வரும் 7ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அனுஞ்சை, விக்னேஸ்வரா பூஜை, புண்யகாவசனம், கணபதி ஹோமம், தனபூஜை, கலசாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அருட் பிரசாதம்...
தா.பழூர் அருகே பூனைக்குட்டிக்கு தாயாக மாறிய நாய்
தா.பழூர், ஜூலை 2: பொதுவாக தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை பல விதங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நன்றி குணத்தில் 5 அறிவு ஜீவனில் நாயை மிஞ்ச எதுவும் இல்லை. ஆனால் ஒரு இனத்தில் வேறு விலங்குகள் அருகில் வந்தால் கடிப்பது...