உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் படை பயிற்சி முகாம்
ஜெயங்கொண்டம், ஜூலை 16: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒரு தனியார் மண்டபத்தில் இளைஞர்களுக்கான தொண்டர் படை பயிற்சி முகாம் நடைபெற்றது. காத்தவராயன் தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில பொருளாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார் . தொண்டர் படை பயிற்சியாளர்...
வல்லக்குறிச்சி கிராமத்தில் பாவாடைராயன் அறன் நாச்சியார் ஆலய கும்பாபிஷேக விழா
ஜெயங்கொண்டம், ஜூலை 15: ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் வல்லக்குறிச்சி கிராமத்தில் உள்ள அறன் நாச்சியார் உடனுறை பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம்- வல்லக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அறன் நாச்சியார்...
கலெக்டர் வழங்கினார் பெரம்பலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்,ஜூலை 15: பெரம்பலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.300 க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின்...
பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு
பெரம்பலூர்,ஜூலை 15: பெரம்பலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மாவட்ட அளவில் 86 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பேட்டி. ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து விளக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(14ம் தேதி) திங்கட்கிழமை...
பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம்
பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிஞர் பாட்டாளி எழுதிய தீராக்களம் எனும் புதினத்தின் திறனாய்வுக் கூட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் காப்பியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டதலைவர் செல்லதுரை, புலவர்...
ஆடி திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் சிலைகள், வளாகங்கள் தூய்மை பணி மும்முரம்
ஜெயங்கொண்டம், ஜூலை 14: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் தலைமையிடமாக வைத்து கங்கை முதல் கடாரம் (மலேசியா) வரை ஆட்சி புரிந்ததன் நினைவாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அதாவது மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி...
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி
பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளை முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல நல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது....
அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள்
பெரம்பலூர், ஜூலை 11: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று (10ம் தேதி) பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள்...
பெரம்பலூரில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர், ஜூலை 11: பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் ஆணையின்படி கூட்டுறவுத்துறை அமைச்சரின் மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அறிவிப்பு எண்.3-ல் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் குறை...