பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு கூட்டம்
பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூர் துறைமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டகுழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம் துறைமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, மாவட்ட துணைச் செயலாளராக சந்திரன், துணைத்...
சிசிடிஎன் காவலர்கள், எழுத்தர்களுக்கு கணினி இயந்திரம் பயன்படுத்தி விரல்ரேகை பதிய பயிற்சி வகுப்பு: அரியலூர் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர், ஜூலை 20: பெரம்பலூரில் காவல்நிலையங்களில் பணிபுரியும் சிசிடிஎன்எஸ் காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு நவீன இயந்திரங்கள் மூலம் குற்றவாளிகளின் விரல்ரேகைகளை எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் சிசிடிஎன்எஸ் காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா...
கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள்
ஜெயங்கொண்டம், ஜூலை 20: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கங்கைகொண்ட சோழபுரத்தை...
பொற்பதிந்தநல்லூரில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தா.பழூர், ஜூலை 19: பொற்பதிந்தநல்லூரில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் வராமல் தடுக்க தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை அரியலூர் மண்டலம் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்- கோமாரி நோய் தடுப்பு திட்டம் 2025-26ன் கீழ் ஏழாவது சுற்று...
ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுர காளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பெரம்பலூர், ஜூலை 19: பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக் கணக்கானோர் திரண்டு பக்தியுடன் வழிபட்டனர். ஆடி வெள்ளி என்பது அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, நிரந்தரமாக அம்பிகையின் அருள் வீட்டில் நிலைக்க செய்வதற்காக வேண்டிக் கொள்ளும் திருநாள் ஆகும். ஆடி மாதம்...
தா.பழூர் பகுதியில் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு
தா.பழூர், ஜூலை 19: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுந்தரேசபுரம், கோவிந்தபுத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிகடைகளில் தா.பழூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்...
தா.பழூர் சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தா.பழூர், ஜூலை 18: தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறைகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கால பைரவருக்கு பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது....
அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பகோரி தொடக்ககல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம், மறியல்
பெரம்பலூர், ஜூலை18: பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- சாலை மறியலில் ஈடுபட்ட 89 பெண்கள் உள்பட 171 பேர் கைது...
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டத்தில் \”சாதி பாகுபாடற்ற, சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடை பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என்று...