3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு முகாம்; மாற்று திறனாளிகளின் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு...
பெரம்பலூரில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்: ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்
பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 25 ம்தேதி நடைபெற உள்ளது- மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும்...
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 2, 2ஏ ேபாட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மற்றும் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பொது பாடப்பிரிவு வகுப்புகள் இன்று 23ம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது - மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்- கருப்பு துணியில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பு...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உயர் கல்விக்கு உதவிய கலெக்டர்
பெரம்பலூர், ஜூலை 22: பெரம்பலூரில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனின் உயர் கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ். பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நெகழ்ச்சி சம்பவம். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்றுபொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர்...
வேள்விமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது
குன்னம், ஜூலை 22: மாட்டுவண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேல்விமங்களம் அம்பேத்கர் தெரு அருகே இரண்டு மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டு...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா
பெரம்பலூர், ஜூலை. 22: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை மாவட்டக் கலெக்டர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று மக்கள்குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு...
பெரம்பலூரில் சிஐடியூ மாவட்ட மாநாடு ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும்
பெரம்பலூர், ஜூலை 21: பெரம்பலூரில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) பெரம்பலூர் மாவட்ட மாநாடு புது பஸ்டாண்டு அருகே அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (20ம் தேதி) நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி சங்க கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர்...
வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
குன்னம், ஜூலை 21: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயலப்பாடி ஊராட்சி வ.கீரனூர், வீரமநல்லூர் ஆகிய கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊரில் புகழ்பெற்ற வையக்கரை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில்...