ஆக.4ம்தேதி தேர்பவனி நாரணமங்கலம் கிராமத்தில் 1ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாடாலூர், ஜூலை 28: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான மனு, மற்றும் இணைப்பு படிவம் கிடைக்காமல் அவதியுறும் பொதுமக்கள் இதனால்அரசுக்கு தங்களின் கோரிக்கைளை தெரியப்படுத்த முடியவில்லை என்று கூறினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 1-8-2025 அன்று நடைபெற...
பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
பெரம்பலூர்,ஜூலை.28: பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81வது ஆண்டு திருத்தலப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஆக.4ம்தேதி தேர்பவனி நடைபெறுகிறது. பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள, புனித பனிமயமாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டு பெருவிழா, வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது....
லாடபுரம் ஆதிதிராவிடர் நல பள்ளியில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்
பெரம்பலூர், ஜூலை 26: விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பது என லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று (25ம் தேதி) மாலை பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடைபெற்றது. பள்ளித்...
பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக்.பள்ளியில் 28ம் ஆண்டு விளையாட்டு தினவிழா
பெரம்பலூர், ஜூலை 26: பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 28ம் ஆண்டு விளையாட்டு தினவிழா நேற்று நடைபெற்றது. ரோவர் கல்விகுழுமத்தின் மேலாண் தலைவர் டாக்டர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மகாலெட்சுமி வரதராஜன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஹேமலதா, மாவட்ட...
பூலாம்பாடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ நலத்திட்ட உதவி வழங்கினார்
பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம், பூலாம்பாடி பேரூராட்சியில் 9வது வார்டு முதல்15 வது வார்டு வரை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 551 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு, பொது மக்கள்...
ஆடி அமாவாசை சிறுவாச்சூர் மதுர காளியம்மன் உள்பட அம்மன்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
பெரம்பலூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்மன் வழி பாட்டுத் தலமான சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கண்ணகியின் சினம்...
இருசக்கர வாகனங்கள், கார்களில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
பெரம்பலூர், ஜூலை 25: இருசக்கர வாகனங்கள், கார்களில்ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுகூட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட...
குடியிருப்புகளில் சூரியஒளி மின்சக்திபேனல் நிறுவ விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்
பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் மாவட்டத்தில் சூரியகர், சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டக் கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசால் தொடங்கப் பட்டுள்ள சூரியகர் சூரிய ஒளி மின் திட்டம் குறித்து...
வழக்கின் முழு கட்டணத்தையும் திரும்ப பெறலாம் சமரச மையத்தில் காணப்படும் தீர்வுக்கு மேல்முறையீடு கிடையாது
பெரம்பலூர்,ஜூலை.24: வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமாகத் தீர்வு காணப்பட்டால், முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்பப் பெறலாம். சமரச மையம் குறித்து வாகனம்மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பத்மநாபன் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜூலை 3ம் தேதி முதல், பெரம்பலூர் மாவட்ட சமரச மையத்தில்,...