கோத்தகிரியில் சாரல் மழை
கோத்தகிரி, ஜூலை 11: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டு, பிற்பகல் நேரங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட் புரூக்,...
ஓரணியில் தமிழ்நாடு’ வீடுவீடாக சென்று திமுகவில் இணைய முபாரக் அழைப்பு
குன்னூர், ஜூலை 11: திமுக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026ம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம், 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், குன்னூர்...
முதல்வர் மருந்தகங்களில் இணைப்பதிவாளர் சோதனை
ஊட்டி, ஜூலை 11: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கேத்தி பாலாடாவில் செயல்பட்டு வரும் கெம்பையாடா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் சாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனிநபர்தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆகிய மருந்தகங்களில் நேற்று முன்தினம் நீலகிரி மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் நேரில்...
ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்
ஊட்டி, ஜூலை 10: ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஊட்டியில் உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. நேற்று கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தது. போட்டிகளை நீலகிரி மாவட்ட உடற்கல்வி...
இரண்டாம் சீசன் நெருங்குகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா பராமரிப்பு தீவிரம்
ஊட்டி, ஜூலை 10: இரண்டாம் சீசன் நெருங்கிவரும் நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஊட்டியில் இரு சீசன்கள் நடைபெறுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மாதம் வரை இரண்டாம் சீசனாகவும் நடைபெறுகிறது. முதல்...
சேறும் சகதியுமாக மாறிய விசி காலனி சாலை
ஊட்டி, ஜூலை 10: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதிக்கு செல்லும் சாலை, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் மக்கள், பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து விசி காலனி செல்லும் சாலையை பயன்படுத்தி...
பாலக்காடு அருகே வெவ்வேறு சம்பவத்தில் பைக் மீது லாரி மோதல் வாலிபர்கள் இருவர் பலி
பாலக்காடு,ஜூலை9: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பழயனூரை சேர்ந்தவர் அகில் (30). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது எதிரே சிமெண்ட் கலவை லாரி அகில் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகிலை அருகில் இருந்தவர்கள் மீட்டுதிருச்சூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி...
கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
பந்தலூர், ஜூலை 9: பந்தலூர் அருகே தேவாலா பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், குடியிருப்புகள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தேவாலா பஜார் கரியசோலை சாலை பகுதியில் இருந்து ஆர்டிஐ சாலை...
பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி
பந்தலூர், ஜூலை 9: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (41), இவர் நேற்று காலை கீழ்நாடுகாணி பகுதியில் இருந்து கூலி வேலைக்கு மசினகுடி பகுதிக்கு பைக்கில் சென்ற போது பாண்டியார் குடோன் பகுதியில் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் பகுதிக்கு லோடு ஏற்றி வந்த லாரி எதிரே...