சிலிண்டர் வெடித்து தீ விபத்து: மூதாட்டி காயம்
ஊட்டி, செப்.23: ஊட்டியில் பாஸ்ட் புட் கடையில் சிலிண்டர் வெடித்ததில் பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது.ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் ஆரணி ஹவுஸ் நுழைவு வாயில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர். இவரது மனைவி மல்லிகா (60). நேற்று வழக்கம்போல் மாலை இந்த கடையில் சமையல் வேலையில்...
மைக்செட் அமைப்பதில் தகராறு போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம்
குன்னூர், செப். 23: எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி குன்னூரில் மைக்செட் அமைப்பதில் போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவரது 5ம் கட்ட சுற்றுப்பயணம் இன்றும் (செப்.23), நாளையும் (செப்.24) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இன்று குன்னூர்...
மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது
பாலக்காடு, செப். 22: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை பேலீசார் கைது செய்தனர். மன்னார்க்காடு அருகே சங்கலீரியை சேர்ந்த அஷீஸின் மகன் முகமது ரபீக் (28). இவர் அப்பகுதியிலுள்ள 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிக்கூடம் சென்று வரும் போது பைக்கில் சிறுமியை பின் தொடர்ந்து வந்து...
சாலையோரம் கிடந்த கஞ்சா சாக்லேட்கள்
ஈரோடு,செப்.22: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட கொல்லம்பாளையம்,பழைய பூந்துறை ரோடு, சென்னிமலை ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் சில சாக்லேட்டுகள் கிடந்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவை கஞ்சா சாக்லேட் என்பது...
வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பந்தலூர், செப்.22: பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகளிடமிருந்து கூடலூர், பந்தலூர் பகுதி மக்களுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த கோரியும், நிலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும்,...
ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைக்க மானியம்
ஊட்டி, செப். 19: ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு...
குன்னூர், பந்தலூரில் திடீர் மழை
குன்னூர், செப்.19: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டேரி, பெட்போர்ட், வண்டிச்சோலை, அருவங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் மதியம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி...
ஊட்டியில் நாளை ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்
ஊட்டி, செப். 19: நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ கூறியிருப்பதாவது: நீலகிரி எம்பி மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாளை 20ம் தேதி காலை 10.30 மணியளவில் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை அரங்கில் வனத்துறை அதிகாரிகளுடன் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...
புதர் சூழ்ந்த பந்தலூர் வருவாய் அலுவலகம்
பந்தலூர், செப்.18: பந்தலூர் வருவாய் ஆய்வாலர் அலுவலகம் அருகில் முற்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. பந்தலூர் பஜார் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் ஒரு பகுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாகவும் இருந்து வருகிறது. தினந்தோறும் வருவாய் அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து பாதுகாப்பற்ற...