ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் தீவிரம்
ஊட்டி,ஜூலை4: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணிகளை தமிழ்நாட்டில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியை சென்னையில் கடந்த 1ம் தேதி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லும் வகையில்,அனைத்து பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் ஏன் மக்கள்...
அங்கன்வாடி மையம் முறையாக செயல்பட பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர், ஜூலை 3: பந்தலூர் அருகே கொளப்பள்ளி அங்கன்வாடி மையம் முறையாக செயல்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் முறையாக செயல்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. சனிக்கிழமை நாட்களில் முறையாக திறப்பதில்லை அதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும்,...
பிங்கர்போஸ்ட் - காந்தல் சாலையில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு
ஊட்டி, ஜூலை 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது தவிர நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் சிறிய குழாய்கள் மற்றும்...
மருத்துவ கல்லூரி விடுதி குடிநீர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு
ஊட்டி, ஜூலை 3: ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி விடுதிக்கு குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.23 கோடி தமிழக முதல்வர் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என ஊட்டியில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆ.ராசா எம்பி தெரிவித்தார். ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்...
கோத்தகிரி-குன்னூர் சாலையில் கால்நடைகள் நடமாடுவதால் விபத்து அபாயம்
கோத்தகிரி, ஜூலை 2: கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர், உதகை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள்...
தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நேர்காணல்
கூடலூர், ஜூலை 2: கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வரும் டெக்ஸ்மோ தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கந்தவேல் மற்றும் நிர்மல் பாபு ஆகியோர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன்...
ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஊட்டி, ஜூலை 2: ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருண், துறை தலைவர் பொன்னுசங்கர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்வேறு பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், பட்டம் பெற்ற...
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்
கோபி, ஜூலை 1: கோபியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பவானி அருகே உள்ள பெருமாம்பாளையம் ஆண்டிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பன் மனைவி கமலம்(76). இவர் கடந்த 16ம் தேதி கோபி பேருந்து நிலையத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பேருந்தில்...
நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அமளி
பந்தலூர், ஜூலை 1: நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். ஆணையாளர் சுவிதா முன்னிலை வகித்தார். தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில்...