தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் லிசியான்தஸ் வண்ண மலர்கள்
ஊட்டி, ஆக. 12: தாவரவியல் பூங்காவில் ரோஜா மலர்களை போன்று காட்சியளிக்கும் லிசியான்தஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்...
வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண்
ஊட்டி, ஆக. 12: நீலகிரி வனகோட்டம், முதுமலை புலிகள் காப்பக மண்டலத்தில் பொது மக்களின் வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்களை ஒட்டியுள்ளதால், உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதால், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது....
மசினகுடி-மாயார் சாலை ஓரத்தில் மரத்தில் சாய்ந்து நின்ற கரடியால் பரபரப்பு
ஊட்டி, ஆக. 12: மசினகுடி - மாயார் சாலையில், சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் சாய்ந்த படி நின்று கொண்டிருந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல...
கீழ் பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு
ஈரோடு, ஆக. 11: ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே, சென்னிமலை ரோடு, முகாசி புலவன்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை வெள்ளோடு போலீசார் நேற்று முன்தினம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து...
தேர்தல் ஆணையத்தை கண்டித்து பந்தலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பந்தலூர்,ஆக.11: பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவாலா கமிட்டி தலைவர் சவுக்கத் அலி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது அதற்கு பாஜக உடந்தையாக இருப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு உறுப்பினர்...
ஆடிபூரத்தை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம்
ஊட்டி, ஆக.11: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஊட்டியில் ஆடிபூர கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிபூரத்தை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம் நடைபெறும். இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலத்தில்...
யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரி 3ம் நாளாக பாடந்துறையில் உண்ணாவிரத போராட்டம்
கூடலூர், ஆக.9: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். எல்லைகளில் அகழி மின்வேலி அமைத்து யானைகள் மீண்டும் ஊருக்குள் வராத வண்ணம் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் நேற்றும் 3வது நாளாக...
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நிஷாகந்தி பூ
மஞ்சூர், ஆக.9: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வசிப்பவர் பேபி. மஞ்சூர் ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வரும் பேபி தனது வீட்டில் ரோஜா, நிஷாகந்தி உள்பட பலவகையிலான பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த செடியில் நிஷாகந்தி மலர் ஒன்று பூத்தது. வெண்மை நிறத்தில் பூத்துள்ள இந்த நிஷாகந்தி...
ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமான மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை
ஊட்டி, ஆக. 9: ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுக்கு முன்பு கற்பூர மரங்கள், சீகை மரங்கள் மற்றும் சாம்பிராணி மரங்கள் அதிகளவு நடவு செய்யப்பட்டன. தற்போது இந்த...