நெல்லியாம்பதியில் நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பாலக்காடு, ஆக.2: நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குளோரின் தெளிப்பு பணி நடந்தது. நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாடகிரி, தோட்டேக்காடு, ராஜாக்காடு, புல்லாலா, ஓரியண்டில், லில்லி, நூரடி, போத்துப்பாறை, மீரப்லோரா, கூனம்பாலம், ஏலம் ஸ்டோர், தேனிபாடி, கைக்காட்டி, ஆரஞ்சு பண்ணை, புலயம்பாறை, ஊத்துக்குழி, சீதார்குன்று, கோட்டயங்காடு மற்றும் சந்திரமலை...
அட்டப்பாடியில் மக்கள் குறைதீர் கூட்டம்
பாலக்காடு, ஆக.2: அட்டப்பாடியில் பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் 139 புகார் மனுக்களை பெற்றனர். இதில், 100 புகார் மனுக்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக தீர்வு வழங்கினார். 39 புகார் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு தீர்வுகள்...
தேவாலா தனியார் தார் கலவை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
பந்தலூர், ஆக.2: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தார் கலவை ஆலையின் மதில் சுவர் கடந்த 28ம் தேதி இடிந்து விழுந்து அருகே உள்ள வீடுகள் சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்து வந்த மதில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து...
மலம்புழா அருகே ரெட் ரன் போட்டி
பாலக்காடு, ஆக.1: பாலக்காடு மாவட்ட அளவிலான யூத் பெஸ்ட் தினத்தை முன்னிட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவ அலுவலகம், மாவட்ட எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி, மாவட்ட நாட்டு நலத்திட்டம் ஆகியவை ஒருங்கிணைப்பில் மலம்புழாவில் ரெட் ரன் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போட்டியை மலம்புழா கிராமப்பஞ்சாயத்து தலைவர்...
சமையல் எரிவாயு நுகர்வோர் காலாண்டு கூட்டம்
ஊட்டி, ஆக.1: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு சமையல் எரிவாயு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலும்...
ரோந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தை விரட்டிய காட்டு யானை
கூடலூர், ஆக. 1: கூடலூரை அடுத்த தேவர் சோலை சர்க்கார்முலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தை அந்த வழியாக சாலையில் நடமாடிய காட்டு யானை விரட்டியது. கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளை கண்காணிக்கவும் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், வனத்துறையினர் இரவு நேரத்தில்...
ஒய்எம்சிஏ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஊட்டி, ஜூலை 31: ஊட்டி ஒய்எம்சிஏ., மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். ஒய்எம்சிஏ., தெற்கு மண்டல தலைவர் மற்றும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் வில்ஸ்ரோ டாஸ்பின் தலைமை வகித்து கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் அன்றாட வாழ்வில்...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால உடைகள்
குன்னூர், ஜூலை 31 : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, சில அணைகளில் உபரிநீர் வெளியேறி வருகிறது. இருப்பினும் தற்போது கூடலூர், ஊட்டி போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வந்தாலும் குன்னூர் பகுதிகளில் மழை...
காற்றுடன் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
ஊட்டி, ஜூலை 31: ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை தொடர்கிறது. கடும் குளிரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை பெய்யும். இந்த மழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசும். மேலும், எந்நேரமும் மழை பெய்து...