சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு: ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ஊட்டி,செப்.14: ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் மாதந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்...
செல்போன் கடையில் திருட்டு
ஊட்டி, செப்.14: ஊட்டி நகரில் உள்ள ஒரு செல்போன் கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஊட்டி நகரின் மையப்பகுதியில் சேட் நினைவு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் அனிபா என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு விலை உயர்ந்த...
தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மேரி கோல்டு மலர்கள்
ஊட்டி, செப்.14: இண்டாம் சீசன் துவங்கி இரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில், மேரிகோல்டு மற்றும் சால்வியா போன்ற மலர்கள் பூத்துள்ளதால் இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள்...
கோத்தகிரியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ஊட்டி, செப்.13: கோத்தகிரியில் இன்று நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனை செய்து ெகாள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் கூறியிருப்பதாவது: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு உயர் மருத்துவ சேவை முகாம் இன்று (13ம் தேதி)...
வனப்பகுதியில் கனிம வளத்திருட்டு: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
ஊட்டி,செப்.13: நீலகிரி வன கோட்டம் ஊட்டி வடக்கு வனசரகம் முத்தநாடுமந்து காவல் பகுதிக்கு உட்பட்ட வென்லாக் டவுன் காப்புகாடு பழைய எச்பிஎப் நிறுவன பகுதியில் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து திருட்டுதனமாக மண் மற்றும் கற்களை உடைத்தது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் பிரதீப்குமார் (32),அஹ்மத்துல்லா (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய எச்பிஎப் பகுதியை...
முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
கோத்தகிரி, செப். 13: கோத்தகிரி கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மலை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மூன்றரை...
கோத்தகிரியில் பரவலாக மழை
கோத்தகிரி, செப். 12: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, அரவேனு, எஸ்.கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக...
மது அருந்தும் பாராக மாறிய நடைபாதை
ஊட்டி, செப். 12: ஊட்டி- கோத்தகிரி சாலையில் இருந்து பூங்கா செல்லும் நடைபாதை மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி- கோத்தகிரி சாலையில் உழவர்சந்தை அருகே உள்ள பாலத்தை ஒட்டி நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை வழியாக சென்றால் பூங்கா சாலைக்கு செல்ல முடியும். இதனால் இச்சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்...
ஊட்டி தெற்கு ஒன்றியம், கீழ்குந்தா பேரூர் பாகநிலை முகவர் கூட்டம்
ஊட்டி, செப். 12: ஊட்டி தெற்கு ஒன்றியம், கீழ்குந்தா பேரூர் பாகநிலை முகவர்கள் கூட்டம் நடந்தது. ஊட்டி தெற்கு (மேற்கு) ஒன்றியம் மற்றும் கீழ்குந்தா பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாகநிலை முகவர்கள் பிஎல்ஏ., 2 கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஊட்டி சட்டமன்ற தொகுதி...