குன்னூர் அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ஊட்டி, செப். 11: நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குன்னூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமை வகித்து, ஆண்களின் திருமண வயது 21, பெண்களுக்கு 18....
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
மேட்டுப்பாளையம், செப்.11: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வன பத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றில் நேற்று இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த லைப் கார்ட்ஸ் போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் 28 வயதுள்ள காரமடையை சேர்ந்த அந்த பெண், குடும்பத்தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து...
குந்தை சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் தேர்வு
ஊட்டி, செப். 10: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தை சீமை படுகர் நல சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் மஞ்சூரில் நடந்தது. கூட்டத்திற்கு, குந்தை சீமை சின்ன கணிக்கே போஜாகவுடர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஒப்புதலை பார்பத்தி அன்னமலை முருகேசன் அளித்தார். அதன்படி,...
சாலையோரத்தில் விபத்து அபாயம் தடுப்பு அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
மஞ்சூர், செப். 10: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. கிண்ணக்கொரை, இரியசீகை, கோரகுந்தா, அப்பர்பவானி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் தாய்சோலா வழியாகதான் சென்று வரவேண்டும். வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதுடன், கொண்டை ஊசி வளைவுகளுடன் மிக குறுகிய...
வீட்டு கதவு உடைத்து நகை, பணம் திருட்டு
மஞ்சூர், செப். 10: மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு. இப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மணி. ஓட்டலின் கீழ்புறம் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மணி தனது குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து மீண்டும் எமரால்டு...
சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் ஆபத்தான மரங்களை அகற்றும் பணி
பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இந்த பணியால் தமிழக- கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரளா மாநிலம், வயநாடு பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருந்து வந்த...
பந்தலூர் அருகே சமையல்காரர் தற்கொலை
பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே ஏலமன்னா அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (38). இவர், நேற்று முன்தினம் அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு...
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே சேரம்பாடி சுங்கத்தில் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு டவர் உள்ளது. இதில், 2 பேட்டரிகள் திருட்டுபோனது. இதுகுறித்து கூடலூர் உட்கோட்ட பொறியாளர் சைபு தாமஸ் சேரம்பாடி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த திவாகரன் (28), பேட்டரிகளை...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்க பாலக்காடு கோட்டை மைதான மார்க்கெட்டில் அலை மோதிய மக்கள்
பாலக்காடு, செப். 3: பாலக்காடு கோட்டைமைதானத்தில் ஓணம் திருவிழாவையொட்டி மார்கெட்டில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கேரளாவில் ஓணம் திருவிழா கடந்த அத்தம் நட்சத்திரநாள் முதல் திருவோணப்பண்டிகையை வரவேற்றவண்ணம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளின் முன்பாக அத்தப்பூக்கோலம் அமைத்தும், அரசு மற்றும் தனியார் அலுவலங்களிலும் அத்தப்பூக்கோலம் அமைத்து கொண்டாடி வருகின்றனர். பாலக்காடு...