வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதித்த ஊட்டி ரோஜா
ஊட்டி, ஜூலை 25: ஊட்டியில் ரோஜா பூங்காவில் பல வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 35...
கோத்தகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு தலைமை கொறடா, கலெக்டர் நேரில் ஆய்வு
கோத்தகிரி, ஜூலை 25: கோத்தகிரியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அரசு தலைமை கொறடா, கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களுக்கு செய்த அடிப்படை வசதிகள்,...
செத்தக்கொல்லியில் அடிப்படை வசதி கேட்டு அதிகாரியிடம் மனு
பந்தலூர், ஜூலை 25: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா செத்தகொல்லி பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெல்லியாளம். இங்குள்ள நகராட்சி 12-ம் வார்டு செத்தக்கொல்லி பகுதியில் ரூ. 35 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது....
குழந்தைகளின் நலனை பேணிக்காத்த சேவை நிறுவனங்களுக்கு விருது
ஊட்டி, ஜூலை 24: குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’ வழங்கப்படவுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’...
பலா மரங்களை முற்றுகையிட்ட யானைக்கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை
குன்னூர், ஜூலை 24: குன்னூரில் பலா சீசன் துவங்கியுள்ளதால் பழங்களை தேடி பழங்குடியின குடியிருப்பு அருகே குட்டியுடன் வந்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பசுமை போர்வை போர்த்தியதுபோன்று செடி, கொடி, மரம், புற்கள் முளைத்துள்ளன.குன்னூர்...
தொடர் மழை காரணமாக மாயார் அணை நீர்மட்டம் உயர்வு
ஊட்டி, ஜூலை 24: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணை, கிளன்மார்கன் நீர்தேக்கம் மற்றும் வனப்பகுதிகளில் உருவாகும் நீரோடைகளில் உற்பத்தியாக கூடிய நீர் சுரங்கப்பாதை வழியாக சிங்காரா மின் நிலையத்திற்கு செல்கிறது. அங்கு மின் உற்பத்தி செய்யப்பட்ட பின் மரவக்கண்டி அணைக்கு செல்லும் நீரை பயன்படுத்தி அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்...
செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு
ஊட்டி, ஜூலை 23: உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனம் மூலம் முதல் 10 நாட்களுக்கு...
கொல்லி வயல் சாலையை சீரமைக்க கோரிக்கை
கூடலூர், ஜூலை 23: கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் பிரிந்து கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், கொல்லி வயல், ஆனை செத்த கொல்லி வழியாக கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல் பகுதியை இணைக்கும் சாலை உரிய பராமரிப்பு இன்றி பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள், பழங்குடியின...
கனமழைக்கு மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
பந்தலூர், ஜூலை 23: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பந்தலூர் அருகே அம்பலமூலா சந்தனசிரா பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி லட்சுமி என்பவரது வீட்டின் அருகே இருந்த மரம் விழுந்து வீடு சேதமானது. இதேபோல், பந்தலூர் கூவமூலா ஆதிவாசி...