தூய்மை பணி தீவிரம்
பாலக்காடு, ஜூலை 22: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வாளையார் - கோழிக்கோடு தேசியசாலையில் பாலக்காடு கல்மண்டபம் உள்ளது. இங்குள்ள வாய்க்கால் மற்றும் சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் காலி பாட்டில்களை இங்கு வீசிச்சென்றுவிடுகிறார்கள். இங்கு நடந்த தூய்மை பணியை பஞ்சாயத்து தலைவர் உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்....
பழைய நெல்லியாளம் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
பந்தலூர், ஜூலை 22: பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் பகுதியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் டேன்டீ ஒட்டிய பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட தார் சாலை முழுவதும் பழுதடைந்து வெறும் கற்கள் மட்டுமே கட்சி அளிக்கிறது. மழை காலங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் மழைநீர்...
ரயில் பயணிகளிடம் திருடியவர் கைது
பாலக்காடு, ஜூலை 21: கடந்த ஜூலை. 14ம் தேதி கன்னியாகுமாரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இரண்டு பயணிகளின் தங்க நகைகள், எலக்ட்ராணிக் உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின. இது குறித்து அந்த பயணிகள் பாலக்காடு சந்திப்பு ரயில்நிலைய போலீசாரிடம் புகார் மனுக்கள் அளித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயி்ல்...
படச்சேரி பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்
பந்தலூர், ஜூலை 21: பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் புகுந்து குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும்,...
விபத்தில் வங்கி ஊழியர் பலி
பாலக்காடு, ஜூலை 21: கேரள மாநிலம் திருச்சூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லாலூர் பகுதியை சேர்ந்த ஏபல் சாக்கோ போள் (34). இவர் குன்னம் குளத்தில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்றார். அப்போது, அய்யன்தோஸ் அருகே முன்னால் சென்ற...
தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம்
ஊட்டி, ஜூலை 20: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு மலர் செடிகள் நடவு செய்ய 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள்...
தொட்டபெட்டா சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
ஊட்டி, ஜூலை 20: ஊட்டி அருகே தொட்டபெட்டா சாலையில் பகல் நேரத்திலேயே வலம் வந்த கரடியை கண்டு சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காட்டு மாடு, கரடி, சிறுத்தை, யானை, புலிகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துள்ளது. துவக்கத்தில் இரவு...
பந்தலூர் அருகே சேற்றில் கால்பந்து போட்டி: தாளூர் கல்லூரி மாணவர்கள் அசத்தல்
பந்தலூர், ஜூலை 20: பந்தலூர் அருகே தாளூர் கலை அறிவியல் கல்லூரியில் சேற்றில் கால்பந்து விளையாடி அசத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான எருமாடு, தாளூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மாநிலம் மற்றும் தேசிய...
கீழ்நாடுகானி சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
கூடலூர், ஜூலை 19: கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு உணவு தானியங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கூடலூர் வழியாக கேரள மாநிலம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. நாடுகாணி, கீழ்நாடுகாணி பகுதியில வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில வருடங்களாக உரிய பராமரிப்பின்றி காணப்படும் இந்த சாலையில்...