நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஊட்டி,ஆக.21: நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகிக்கிறார். இதில் குன்னூர் நகரம்,சிம்ஸ்பார்க், மவுண்ட்ரோடு, மவுண்ட் பிளாசண்ட், எடப்பள்ளி, பேரக்ஸ், கிளண்டேல், சேலாஸ், உபதலை, குந்தா, ஆருகுச்சி, எடக்காடு, அதிகரட்டி, கோத்தகிரி நகரம், அரவேணு, வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, கீழ் கோத்தகிரி, நெடுகுளா, கோத்தகிரி கிராமியம் பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களின்...
விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
கூடலூர்,ஆக.21: கூடலூர் அடுத்த மரபாலம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் குமார்(22). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி இரவு 3 பயணிகளுடன் கள்ளிக்கோட்டை சாலை ஆமைக்குளம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நாடுகாணி பகுதியில் இருந்த வந்த சரக்கு லாரி மீது மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில்...
பலத்த காற்றுக்கு ராட்சத கற்பூர மரம் விழுந்து படகு இல்ல மேற்கூரை சேதம்
ஊட்டி, ஆக. 20: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் மாலை நேரத்தில் வீசிய...
ஓடும் ரயிலில் பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு
பாலக்காடு, ஆக.20: புனே-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வாலிபர் மயங்கி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருச்சூர் ரயில் நிலைய போலீசார் வாலிபரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோழிக்கோடு மாவட்டம் பரூக்...
பள்ளி வளாகத்தில் புகுந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்
கூடலூர், ஆக.20: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்புள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வந்த யானை குட்டி ஒன்று பள்ளி வளாகத்திற்குள் சுற்றி திரிந்தது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சுமார் 2 மணி நேரமாக போராடி குட்டி யானையை பிடித்து தாய் யானையுடன் சேர்க்க அழைத்து...
மழையில் ஒழுகும் அரசு பள்ளி
கூடலூர், ஆக. 19: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுப்பாறை அரசு ஆரம்பப் பள்ளியின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் உடைந்துள்ளதால் மழை காலத்தில் வகுப்பறைகளின் உள்ளே தண்ணீர் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பள்ளி கட்டிடத்தின் அருகில் பள்ளியின்...
கொழிஞ்சாம்பாறை அருகே பஸ் சக்கரம் ஏறி மாணவி பலி
பாலக்காடு, ஆக. 19: கொழிஞ்சாம்பாறை அருகே பைக்கில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவி, பஸ் சக்கரம் ஏறி பலியானார். பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை அருகே பழனியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சபீர்அலி. இவரது மகள் நபீஷத் மிஸ்ரியா(7). இவர், கொழிஞ்சாம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 2வது வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் தந்தை சபீர்அலியுடன்,...
குன்னூர் அருகே மரத்தில் ஏறி தேனை ருசித்த 2 கரடிகள்
குன்னூர், ஆக. 19: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில், குறிப்பாக தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகளால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகள் உணவுக்காக உயரமான மரங்களில் ஏறி தேன்கூடு,...
பேரி கார்ட்டில் பைக் மோதி பனியன் தொழிலாளி பலி
அவிநாசி,ஆக.18:அவிநாசியில் நண்பருடன் பைக்கில் சென்றபோது பேரி கார்ட்டில் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தார். திரிபுராவை சேர்ந்தவர் அஜய் ரூபிதாஸ் (26). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சோபிதா (24). இவர்கள் அவிநாசி ரங்காநகரில் வசித்து வசித்தனர். நேற்று தனது நண்பர் ஜோய்சக்மா (28) என்பவரை அழைத்துக்கொண்டு அஜய் ரூபிதாஸ் பைக்கில் புறப்பட்டார். பெருமாநல்லூர்...